காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் எல்லாமே பாஜகவுடன் கூட்டு.. நிர்மல்குமார் பரபரப்பு புகார்

  • மதுரை: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் கர்நாடகா மறுத்து வருகிறது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டுமென கூறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள கட்சிகள் பாஜகவுடன் இணைந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்களை வைத்து எப்படி அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடியும் என நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மல்குமார், "கர்நாடகாவின் அனைத்து கட்சிகளும் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்கிற ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. இங்கேயுள்ள கட்சிகள் ஏதாவது ஒரு வகையில் கர்நாடகாவில் இருந்து தமிழக அரசு தண்ணீர் கொண்டு வந்துவிடகூடாது என்று வேலை பார்க்கிறார்கள். சட்டமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இணைந்துதான் தீர்மானம் நிறைவேற்றினோம். 2 நாட்களில் தீர்மானத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.

    Advertisement

    பாஜகவுடன் இணைந்து கொண்டு

    தூங்கி கொண்டிருந்த அதிமுகவுக்கு எங்கிருந்து ஞானோதயம் வந்தது என தெரியவில்லை. அதற்கு எதிராக அதிமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் அந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அவர் பார்த்து தான் படித்தாரா என தெரியவில்லை. அவருக்கு எதுவும் தெரிவதில்லை. யாரோ கொடுப்பதை படிக்க மட்டும் செய்கிறார். நாங்கள் கொடுத்தோம், நீங்கள் எடுப்பதென்றால் எடுத்து கொள்ளலாம் என்கிறார்.

    தீர்மானத்திலேயே இவ்வளவு குழப்பங்கள் நடக்கிறது. ஒவ்வொருத்துரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்களின் மொத்த குறிக்கோளும் எந்த வகையிலும் இந்த பிரச்சனைக்கு முதலமைச்சர் தீர்வு கண்டு விடக்கூடாது என்கிற பயத்தில் தான் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் பாஜகவுடன் இணைந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவர்களை வைத்து கொண்டு எப்படி கூட்டம் நடத்த முடியும்.

    Advertisement

    தமிழகத்திற்கு எதிராக

    ஒருமித்த கருத்துள்ளவர்களுடன் தான் கூட்டம் நடத்த முடியும். நமக்கான தேவை நீரை பெறுவது தான். அதற்கான அனைத்து வழிமுறைகளையும் முதலமைச்சர் செய்து வருகிறார். எல்லா வகையிலும் ஆராய்ந்து வருகிறார். சட்டசபையில் எல்லாரும் பார்த்து தானே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எடப்பாடி உள்ளிட்டோர் இருந்தும், 2 நாட்கள் கழித்து ஏன் எதிர்க்க வேண்டும். இவர்களை வைத்து எப்படி அனைத்து கட்சி கூட்டம் கூட்ட முடியும்.

    நமக்கான தேவை என்ன என்பதை அறிவோம். சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளை வைத்து கொண்டு தான் ஆலோசனை நடத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிராக ஒரு கட்சி பாஜகவுடன் இணைந்து நீதிமன்றம் செல்கிறது. அதற்கு முந்தைய நாள் தான் பாஜக மத்திய அமைச்சர் கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டலாம். எந்த தடையும் இல்லை என கூறினார். அவர்களுடன் அதிமுக இணைந்துள்ளது.

    Advertisement

    மேல்முறையீடு

    விஜய் அண்ணன் சுமூக தீர்வு எட்டிவிடக்கூடாது என்று வேலை பார்க்கிறார்கள். சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எதற்கு அனைத்து கட்சி கூட்டம். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய உள்ளோம். கர்நாடகாவில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. இங்கு அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை" என்றார்.

    English Summary

    Minister Nirmalkumar said, All Parties in are standing with BJP over cauvery issue. So need of all party meeting.