விஜய்யுடன் யார் எட்டி பார்த்தால் என்ன.. அவர் லண்டன் செல்லவே தேவையில்லை.. அண்ணாமலை புது ட்விஸ்ட்!

  • மதுரை: முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு செல்லாமல், கோவைக்கும், மதுரைக்கும் வர வேண்டும் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார். லண்டனில் யார் எட்டி பார்த்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத அரசியல் என்று கூறிய அண்ணாமலை, லண்டனை விட இந்திய பொருளாதாரம் மேம்பட்டது என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    அண்மையில் முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்த விஜய், பின்னர் ஒரே நாளில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூ.15,300 கோடி ஈர்த்ததார். இதன்பின் முதல்வர் விஜய்யின் பயணம் வெற்றி என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    ஆனால் தொழில் துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் கூட இல்லாமல் முதலீட்டாளர்களை விஜய் சந்திக்க சென்றது பேசுபொருளாகியது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை. இதனால் தமிழக அரசின் அறிக்கை தொடர்பாக பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசுகையில், இந்தியா 4.1 டிரில்லியன் பொருளாதாரத்துடன் இருக்கிறது. இங்கிலாந்து 3.4 டிரில்லியன் பொருளாதாரம் இருக்கும் நாடு. அந்த நாட்டிடம் சென்று பெரிய கூட்டத்தை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டு, அவரை பார்த்தாரா, இவங்க எட்டி பார்த்தாங்களா, அவரு உள்ள போனாரா என்று எதற்கு இந்த வேலையெல்லாம்.. இதெல்லாம் தேவையில்லாதது.

    Advertisement

    தமிழ்நாட்டை பொறுத்தவரை இதெல்லாம் தேவையில்லாத அரசியல். முதல்வர் விஜய் லண்டனுக்கு போனது பற்றி பேச விரும்பவில்லை. முதல்வர் விஜய் லண்டனுக்கு போக வேண்டாம். அதுவொரு டெட் எகானமி. 1% வளர்ச்சி தான் உள்ளது. அவர்களிடம் சென்று முதலீடு செய்யுங்கள் என்றால் எப்படி.. உள்ளூரிலேயே அவர்களால் முதலீடு செய்ய முடியவில்லை.

    இந்தியாவில் இருந்து செல்லக் கூடிய ஜாக்குவார், மஹிந்திரா, டாடா உள்ளிட்டவை மூலமாக அங்கு நாம் தான் முதலீடு செய்து கொண்டிருக்கிறோம். 5 ஆண்டுகளில் லண்டனில் எவ்வளவு இந்தியர்கள் முதலீடு செய்துள்ளார்கள் என்று பாருங்கள்.. அவனே 4 பேரிடம் பணம் கேட்டு கொண்டிருக்கிறான். முதல்வர் விஜய் முதலீட்டுக்காக லண்டன் செல்வதை விட, அவர் மதுரைக்கும், கோவைக்கும் வர வேண்டும்.

    Advertisement

    நம்ம ஊர் தொழிலதிபர்களை சந்திக்க வேண்டும். உள்ளூர் தொழிலதிபர்களை சந்தித்து தொழிலை விரிவுபடுத்த அறிவுறுத்த வேண்டும். அவர்களுக்கு 50% வரி விலக்கு கொடுக்க வேண்டும். இதனைத்தான் விஜய் இரவு முழுக்க ஒட்டிக் கொண்டிருந்தாரா என்ற வகையில் இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

    English Summary

    Annamalai: We The Leaders Founder Annamalai Urges CM Vijay to Prioritize Local Investment Over London Trip