அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனே முடக்குங்கள்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கோர்ட் உத்தரவு

  • மதுரை: கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்களை விநியோகம் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    கோவை, திருச்சி, சேலம்,கடலூர், நெல்லை உள்ளிட்ட மண்டல நூலகங்களுக்கு புத்தக் கொள்முதல் தொடர்பான நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை பெரியார் அறிவுலக பதிப்பக புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குற்றவாளி யார் என தெரியாவிட்டாலும் வழக்கு பதிவு செய்திருக்கலாமே என நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

    அகல்விளக்கு பதிப்பக நூல்கள் வேண்டாம்... கோவை பெரியார் அறிவுலகத்தில் இருந்து 2,000 புத்தகம் அகற்றம்

    இந்த விவகாரத்தில் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அது போல் அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    Advertisement

    நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கான அறிவிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

    பொதுமக்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதன் பின்னரே புத்தகக் கொள்முதல் இறுதி செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

    பெரியார் அறிவுலக நூலக புத்தக மோசடி! திமுக ஆட்சியில் நடைபெறவில்லை.. உறுதியாக சொன்ன உதயநிதி

    ஆனால் இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கோவை பெரியார் அறிவுலக நூலகம் மற்றும் திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    Advertisement

    நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் புத்தகஙகள் கொள்முதல் நடைபெற்றுள்ளது. எனவே இதற்கு காரணமான பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த முறைகேடுகள் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. நாளை புத்தகக் கொள்முதல் தொடர்பான முழு விவரங்களும் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

    கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் 4ஆவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில் அகல்விளக்கு பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த 1800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் கடந்த 4ஆம் தேதி எழுத்தாளர் பெருமாள் முருகன், கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தை நேரில் பார்வையிட்டார்.

    Advertisement

    அப்போது அங்கிருந்த புத்தகங்களை ஆய்வு செய்த போது சில புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமற்ற முறையில் உருவாக்கப்பட்டதாகவும் அதில் உள்ள வரலாற்று தகவல்கள் தவறாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் எழுந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர்.

    English Summary

    Chennai Highcourt Madurai bench orders directorate of vigilance and anti corruption officials to freeze bank accounts of Akal Vilakku publications immediately in Kovai Periyar Arivulagam scam.