தேசமே கரப்பான் பூச்சிகளால் நிரம்பி வழியும் போது.. ஜந்தர் மந்தர் நிரம்பாதா? சிபிஎம் கேள்வி

  • இது குறித்து அவர் தனது x பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இரயில்வே துறையில் 1 இலட்சம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் 3.5 கோடி பேர். தேசமே கரப்பான் பூச்சிகளால் நிரம்பி வழியும் போது ஜந்தர் மந்தர் நிரம்பாதா?

    Advertisement

    வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய பிரதமர் தனது அமைச்சரவை சகாக்களிடம், ரீல்ஸ் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுங்கள் என வேண்டுகோள் வைக்கிறார். பிரதமரே! இராமர் கோயில் ஊழலிலிருந்து தப்பிக்கக் கரப்பான் பூச்சி உதவும் என்று யோசித்தீர்கள். இப்பொழுது கரப்பான் பூச்சிகளிடமிருந்து தப்பிக்க ரீல்ஸ் உதவும் என யோசிக்கிறீர்கள். நேர்வழியில் யோசிக்கவே மாட்டீர்களா?

    Advertisement

    • 92,116 காலியிடங்கள்
    • 3,58,59,270 கரப்பான் பூச்சிகள்

    ரயில்வே அமைச்சரின் பதில் அம்பலப்படுத்தும் வேலையின்மையின் உச்சம். நான் ரயில்வே அமைச்சரிடம் கேள்வி எண் 506/22.07.2026 மூலம் ரயில்வே காலியிடங்கள், பணி நியமனங்கள் பற்றி எழுப்பி இருந்தேன். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

    என்ன சொன்னார் அமைச்சர்?

    அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலின்படி 2004 - 05 முதல் 2013 - 14 வரையிலான 10 ஆண்டுகளில் 4.11 லட்சம் பணி நியமனங்களும், 2014 - 15 முதல் 2026 - 2027 (30.06.2026 வரை) 5.56 லட்சம் பணி நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, காலியிடங்கள் தேவை குறித்து ரயில்வே துறை, பணி நியமன முகமைகளுக்கு அளிக்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். 2024 லிருந்து ஒவ்வோராண்டும் நியமன அட்டவணை வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளில் 1,61,889 நியமனங்கள் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தெளிவில்லாத பதில்

    அமைச்சர் மொத்த காலியிடங்கள் மண்டல வாரியாக எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஒவ்வோராண்டும் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் சீரமைப்பு/மறு பங்கீடு என்ற பெயரால் 2% அதாவது 30000 காலி இடங்கள் சரிகட்டப்பட்டு விடுகிறது என்கிற நடைமுறை பற்றியும் குறிப்பிடவில்லை. இந்திய நாட்டின் மிகப் பெரும் அரசுத் துறை என்ற வகையில் அது வேலை உருவாக்கத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றி முழுமையான விவரங்கள் வெளிப்படையாக பகிரப்பட வேண்டும்.

    அதிர்ச்சி தகவல்கள்

    அமைச்சர் பதிலில் 2024 ஆம் ஆண்டு லோகோ பைலட், டெக்னீசியன், இளநிலை பொறியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், தொழில் நுட்பமல்லாத பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர், லெவல் 1 பணிகள் உள்ளிட்ட 92,116 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதில் பங்கேற்றவர்கள் 3.58 கோடி பேர் என்றும் தகவல் தந்துள்ளார்.

    Advertisement

    ஒரு காலி இடத்திற்கு சராசரியாக 390 பேர் போட்டியிட்டுள்ளனர் என்பது இந்தியாவின் வேலையினமையின் உச்சத்தை உணர்த்துகிறது. கரப்பான் பூச்சிகள் இயக்கம் என்று இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள பெருங்கோபத்தின் வேர்களை நமக்கு சுட்டுவதாகவும் உள்ளது.

    அரசு, பொதுத்துறை வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதும், தனியார் துறைகளில் கௌரவமான வேலைகளை உறுதி செய்வதும் காலத்தின் தேவை என்பதையும் அதில் அரசின் தோல்வியையும் அமைச்சரின் பதில் வெளிப்படுத்துகிறது" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Railway: CPM MP Su. Venkatesan has sharply criticized the vacancies in the railway sector and the response provided by the Central Government regarding them. 3.5 crore people applied for 1 lakh vacancies in the railway sector. The question has been raised: "When the entire nation is teeming with cockroaches, wouldn't Jantar Mantar fill up too?"