திமுகவும் அதிமுகவும் ரகசிய டீலிங்.. தவெக எம்எல்ஏக்களிடம் பேசுறாங்க! ஆனா.. பொடி வைத்து பேசிய சிடிஆர்

  • மதுரை: திமுகவினரும் அதிமுகவினரும் இணைந்து பொது வேட்பாளரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். திமுகவினர் தொடர்ந்து இந்த முயற்சியை செய்து வருகின்றனர் எனவும், எங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் யாரும் விலை போக மாட்டார்கள் எனக் கூறியுள்ளார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்.

    Advertisement

    மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

    Advertisement

    இதில் தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மகளிருக்கு நிதியை வழங்கினார். இந்த நிகழ்வில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்,தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பங்கு பெற்றுள்ளனர்.

    சிடிஆர் நிர்மல் குமார்

    தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3000 கோடி அளவிற்கு சுய உதவி குழுக்களுக்கு தற்போது கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலகட்டங்களில் நிதி சரியாக வழங்கப்படவில்லை. அவற்றை எல்லாம் சரி செய்து 3000 கோடி அளவிற்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திமுக

    மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் நிறைய நபர்கள் பணி நிரந்தரம் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக சார்ந்த நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்துடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேச முயற்சி செய்தார்கள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அந்த முயற்சிகள் நடைபெற்றது.

    பொது வேட்பாளர்

    கரூரை சேர்ந்த ஒரு முக்கியமான நபரும் கைது செய்யப்பட்டார். அவர்களுடைய ஒரே முயற்சி எப்படியாவது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வேண்டும் என்பதுதான் திமுகவினருடைய எண்ணம். வருகிற இடைத்தேர்தலில் திமுகவினரும் அதிமுகவினரும் இணைந்து பொது வேட்பாளரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

    Advertisement

    தவெக எம்எல்ஏக்கள்

    திமுகவினர் தொடர்ந்து இந்த முயற்சியை செய்து வருகின்றனர். அவர்களிடம் லட்சக்கணக்கான கோடி பணம் இருக்கிறது. எங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் யாரும் விலை போக மாட்டார்கள். பாஜக திமுக அதிமுகவினர் இணைந்து வேலை செய்து வருகின்றனர். எங்களுடைய எம்எல்ஏக்கள் வலுவாக இருக்கிறார்கள். எங்களுடைய எம்எல்ஏக்கள் யாருக்கும் விலை போக மாட்டார்கள்.

    மின்சாரத்துறை

    ஒவ்வொரு பதவி மாறுதலுக்கும் கடந்த ஆட்சி கால கட்டங்களில் லட்சக்கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. கடந்த காலங்களில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியது. அதை நிறுத்துவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது என்று உங்களுக்கு தெரியும். இந்த நடைமுறை 23 வருடங்களாக இருந்தது தற்போது ஒரு ரூபாய்க்கு ஆரம்பித்து பத்து ரூபாய்க்கு வந்து நிற்கிறது. மின்சாரத் துறையில் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. யாருக்கும் தெரியாமல் ஷட் டவுன் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து சப்ஸ்டிடேஷங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

    English Summary

    Minister CTR Nirmal Kumar alleges DMK and AIADMK are joining hands to influence TVK MLAs ahead of the upcoming by-election.