ஓபிஎஸ் வேணாம்..சின்னம்மா சிஎம் ஆகனும்! அதிமுக பொதுசெயலாளர் ப்ளானில் ஆர்பி உதயகுமார்! சிடிஆர் அட்டாக்

  • மதுரை: அதிமுகவை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றவர் ஆர்பி உதயகுமார் எடப்பாடிக்கு அடுத்தபடியாக பொதுச் செயலாளர் ஆவதற்கான பணிகளை ஆர் பி உதயகுமார் செய்து வருகிறார் என கூறியுள்ளார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை, சின்னம்மாவை முதல்வராக்குங்கள் என்று முதல் முதலில் சொன்னதும் ஆர்பி உதயகுமார் தான் எனவும் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    உலகப்பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," குடமுழுக்கு க விழாவிற்காக சென்ற வாரம் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதேபோன்று தற்போது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. பக்தர்கள் வருகையின் போது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஆய்வு செய்தோம்.

    சிடிஆர் நிர்மல் குமார்

    அனைத்து பணிகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாளை வீர வசுந்தராயர் மண்டபம் திறக்கப்பட உள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கக்கூடிய முறைப்படி தான் பத்திரிக்கை அடிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் ஏற்கனவே திமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அதெல்லாம் நடக்காது. உண்மையான பக்தர்கள் யாரெல்லாம் கோவிலுக்கு சிறப்பாக பணியாற்றுவார்களோ அவர்கள் தான் அறங்காவலர் குழுவாக நியமிக்கப்படுவார்கள். திமுகவினருக்கும் திமுக கட்சி சார்ந்தவர்களுக்கும் இங்கு வேலை கிடையாது.

    Advertisement

    திமுக

    இந்த கோவிலை கட்டியது திமுகவினர் கிடையாது. எந்த ஒரு தனி நபருக்கும் இந்த கோவில் சொந்தம் கிடையாது. கோவிலுக்காக பணியாற்றக் கூடியவர்கள் தான் அறங்காவலர் குழுவில் இடம் பெறுவார்கள். மீனாட்சி அம்மன் என்பது கோவில். இதில் அரசியல் தலையிட வேண்டாம். தனிப்பட்ட நபர்களுடைய பெயரை பதிவு செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அழைப்பதில் அறங்காவலர்கள் குழு என்று இடம்பெற்று இருக்கிறது. அதுவே போதுமானது.

    முதல்வர் விஜய்

    பாரதப் பிரதமருக்கான போட்டியில் மூன்றாவது இடத்தில் தமிழக முதல்வர் விஜய் இருக்கிறார் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. தலைவர் அந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாரோ?அதைத்தான் கூற முடியும்.
    ஒவ்வொரு நாளும் வீடியோ வெளியிட்டு தமிழக வெற்றிக்கான அரசை விமர்சனம் செய்து வரக்கூடிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார், தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக ஏதாவது ஒன்றை பேசுகிறார்.

    Advertisement

    ஆர்பி உதயகுமார்

    இன்னும் ஆறு மாதத்தில் அதிமுகவில் எடப்பாடி தேவையில்லை, நானே போதும் என்று அவரே சொல்லிவிடுவார்.
    ஓ பன்னீர்செல்வம் தேவையில்லை. சின்னம்மாவை முதல்வராக்குங்கள் என்று முதல் முதலில் சொன்னதும் ஆர்பி உதயகுமார் தான். அதிமுகவை அழித்ததில் 100 சதவீதம் பங்கு ஆர்பி உதயகுமாருக்கு தான் சேரும். பொதுச் செயலாளர் ஆகுவதற்கான முயற்சிகளை தான் ஆர்பி உதயகுமார் செய்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டு

    அலங்காநல்லூரில் திமுக காலகட்டத்தில் கலைஞரின் திமுகவினர் அவர்களுடைய பெயரை நிலை நாட்டுவதற்காக தான் ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டினார்கள். உணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர்கள் தவறுதலாக அவர்களுக்கான விளம்பரத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் செய்து இருக்கிறார்கள். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் இப்படியாக ஒவ்வொரு பகுதிகளிலும் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு அவர்களுடைய இடத்தில் வாடிவாசலில் நடைபெற்ற வருவது நான் அறிந்த ஒன்றுதான் .இது அனைவருக்குமே தெரியும்." என்றார்.

    English Summary

    Minister CTR Nirmal Kumar alleges RB Udhayakumar is planning to become AIADMK general secretary.