Detention Copy இல்லாத தியாகி ஸ்டாலின்! மிசா பற்றி பேசினால் திமுகவுக்கு தான் அழிவு! சிடிஆர் அட்டாக்

  • மதுரை: மு.க.ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டாரா என்பதற்கான முறையான ஆதாரம் இல்லை... "Detention Copy" இல்லாத தியாகி தி.மு.க தலைவர் ஸ்டாலினாக தான் இருப்பார் எனவும், மிசா குறித்து மீண்டும் மீண்டும் பேசினால் திமுகவினருக்கு தான் அழிவு என தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

    Advertisement

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்,

    Advertisement

    அப்போது பேசிய அவர்," கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சிடிஆர் நிர்மல் குமார்

    வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 6,000 காவலர்கள் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகர் முழுவதும் 1,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. கோவில் மேல் தளத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக 2,000 பாஸ்கள் வழங்கப்பட உள்ளது.

    Advertisement

    பள்ளிகளுக்கு விடுமுறை

    மேலும், செப்டம்பர் 17-ம் தேதி மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட உள்ளது. செப்டம்பர் 16-ம் தேதியும் மாநகரப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அறநிலையத்துறை சார்பில் கூடுதல் ஆணையர்கள் ஜெயராமன் மற்றும் மாரிமுத்து தலைமையில் 198 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மிசா கைது

    இந்தக் குழுவினருக்கு கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மிசா குறித்து மீண்டும் மீண்டும் பேசினால் திமுகவினருக்கு தான் அழிவு. சர்க்காரியா கமிஷனில் வெளியிட்ட எவிடன்ஸ் டாக்குமெண்ட்டை தான் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களுக்கான ஊடகங்களில் அதை வெளியிட்டு இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தியாகியாக இருந்தால் டிட்டன்ஷன் காப்பி எதற்காக அழிக்கப்பட்டது?

    Advertisement

    திருமங்கலம் ஃபார்முலா

    ஸ்டாலின் அவர்களுடைய விபரங்கள் அடங்கிய நகல் மட்டும் இல்லை என்றால் என்ன இடைத்தேர்தலில் தோல்விக்கான காரணங்கள் தெளிவாக தெரிந்து விட்டது. திருமங்கலம் ஃபார்முலா என்பதை போல எத்தனை கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக் கொண்டு தெளிவாகத்தான் வாக்களித்தார்கள். கடந்த தேர்தலில் ஐம்பதிலிருந்து நூறு கோடி செலவழித்தார்கள். ஆனால் மக்கள் என்ன பதில் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். மதுராந்தகத்திற்கு எழும்பூரைச் சேர்ந்த பரந்தாமனை நியமித்தால் என்ன நடக்கும்?

    முக ஸ்டாலின்

    தோல்விக்கான காரணம் இப்பவே தெரிந்து விட்டது. தொகுதிக்கு பழக்கமே இல்லாத ஒருத்தரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று கூறினால் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இரா செழியன் அவர்கள் மொழிபெயர்த்த புத்தகம் என்னிடமும் இருக்கிறது. அங்கு எங்குமே மிகப் பெரிய தியாகி ஸ்டாலின் என்று குறிப்பிடப்படவில்லை. தமிழக முதல்வர் லண்டனுக்கு சென்றிருப்பது தொழில்துறைக்கான ஒரு கூட்டம். அப்போது சிறந்த கார் ரேசராக ஆக இருக்கக் கூடிய அஜித்குமாரை அவர் சந்திப்பார்" என்றார்.

    English Summary

    CTR Nirmal Kumar questions Stalin’s MISA arrest evidence and warns repeated MISA claims could politically hurt the DMK.