3ம் இடம் தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. நிர்மல்குமார் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் சர்ச்சை!

  • மதுரை: மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு முன்பாக பள்ளியின் பாடல், கடவுள் வாழ்த்து பாடல் பாடப்பட்ட பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது.

    Advertisement

    அண்மையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்தில் பாடப்பட்டது. முதலில் தேசிய கீதம், பின்னர் வந்தே மாதரம் பாடல், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் விஜய் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்று சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் சில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    தொடர்ந்து சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட்டது. இதனால் இனி எந்த சர்ச்சையும் எழாது என்று தவெகவின் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த நிலையில் மதுரையில் தனியார் பள்ளி சார்பாக நடந்த போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கலந்து கொண்டார்.

    Advertisement

    போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற பெயரில் நடந்த விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி காந்தி அருங்காட்சியகத்தில் தொடங்கியது. இதனை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், எம்எல்ஏ மதூர் பதுருதீன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக பள்ளியின் பாடல், கடவுள் வாழ்த்து பாடல் பாடப்பட்ட பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்ட சூழலில், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

    English Summary

    CTR Nirmal Kumar: Tamil Thaai Vaazhthu Pushed Down Program Agenda at Event with Minister CTR Nirmal Kumar