அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்! நாதக சீமான் பொது வேட்பாளரா? திண்டுக்கல் சீனிவாசன் பதிலை பாருங்க!

  • மதுரை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமானை பொது வேட்பாளராக அதிமுக ஏற்குமா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 119ஆவது ஜெயந்தி மற்றும் 64ஆவது குருபூஜை விழா முடிவடைந்த நிலையில் அவரது நினைவாலயத்தில் இருந்து 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

    Advertisement

    அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனா ஆகியோர் வங்கியில் தங்க கவசத்தை ஒப்படைத்தனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து சந்தித்தனர். அப்போது அவர் பேசுகையில், "மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    பொதுக்குழு எப்போதும் போல தான் நடந்தது. எந்த பிரச்சனையும் இல்லை. கட்சியில் இருந்து 3 பேர் வெளியில் சென்றதால் எந்த ஆபத்தும் இல்லை. அதனை மதுராந்தம், தாராபுரம் தேர்தல் நிரூபித்துள்ளது. வரும் இடைத்தேர்தல்களில் முதலமைச்சர் விஜய் 100 கி.மீ தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினாலும் வெற்றி கிடைக்காது.

    Advertisement

    நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும். 1 பைசா பணம் கொடுக்காமல் வெற்றி என்றனர். தாராபுரம், மதுராந்தகத்தில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்து வெற்றிபெற்றார்கள். தவெக கடந்த முறை வாங்கியதை விட வாக்கு சதவீதம் குறைவு. இது தவெகவுக்கு கூட்டணியால் கிடைத்த வெற்றி.

    விலைவாசி உயர்வை பாருங்கள். 6 மாதத்தில் பிரமாதமாக செய்வேன் என்றார். அரிசி விலையேற்றத்தால் மக்கள் நொந்து போய் உள்ளனர்.; எந்த நன்மைகளும் இந்த ஆட்சியில் இல்லை" என்றனர்.

    அம்பாசமுத்திரம் பொதுவேட்பாளாராக சீமான் அறிவிக்க வாய்ப்பா? என்ற கேள்விக்கு?, "திமுக போன்ற நிலைப்பாடு தான் அதிமுகவும் தேர்தல் வந்த பின்பு அது குறித்து பேசுவோம்" என்றனர்.

    Advertisement

    கொடாநாடு கொள்ளை வழக்கு குறித்த கேள்விக்கு? "கொடநாடு கொள்ளை குறித்து 5 ஆண்டுகளாக திமுக பேசிக் கொண்டிருந்தார்கள் ; கொடநாடு விவகாரத்தில் யார் உண்மையான குற்றவாளியோ நடவடிக்கை எடுக்கட்டும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைவிட அவமானம், கேவலம் தமிழகத்திற்கு எதுவும் ஏற்படாது. குடியரசுத் துணைத் தலைவர் வந்த போது பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்ய வேண்டிய நிர்வாக திறமை, தவெகவுக்கு இல்லை" என்றனர்.

    அதிமுகவில் எந்த பிரச்சனை இல்லை.. இடைத் தேர்தலில் தவெக ஜெயிக்காது! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்
    Advertisement

    மீனாட்சியம்மன் கோவில் மின்தடை குறித்த கேள்விக்கு, "மீனாட்சி தாயே அதனை பார்த்துக் கொள்வார்" என்றனர். அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்கு? "தேர்தல் வியூகத்தை மாற்றியமைத்து வெற்றி பெறும் சூழலை உருவாக்குவோம்.

    ஆளுங்கட்சிக்கு 35% உள்ளது. 65% எதிர்ப்பில் உள்ள வாக்குகளை களை என்ன செய்தால் வெற்றிபெற முடியும் என பொதுச்செயலாளர் முடிவு பண்ணுவார்.

    தாராபுரம், மதுராந்தகத்தில் டிபன் பாக்சில் 500 ரூபாய் கொடுத்துளளனர்" என்றனர். விஜய் தான் 15 ஆண்டு காலத்துக்கு முதலமைச்சர் என அமைச்சர்கள் பேசுவது குறித்த கேள்விக்கு, "அப்படி பகல்கனவு காண்கிறார்கள். நிச்சயம் அது நடக்காது.

    Advertisement

    விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் மக்கள் கொதித்து போயுள்ளனர். 5 வருடம் இந்த ஆட்சி வரவே வராது, நீடிக்காது, இன்னும் 6 மாதத்தில் பாருங்கள் எல்லாமே தெரியும்" என்றனர்.

    திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு? "நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் எங்களின் நிலைப்பாடு". திமுகவில் கட்சி பதவி சீரமைப்பு போன்று அதிமுகவில் நடைபெறுமா? என்ற கேள்விக்கு, "கட்டமைப்புடன் உள்ள கட்சி திமுகவும், அதிமுகவும் தான் : அதிமுக தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வெற்றி வாய்ப்பை பெறுவோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

    English Summary

    ADMK Ex Minister Dindigul Srinivasan replies about Ambasamudhram by poll 2026 common candidate Seeman. He also says about internal election in the party.