மதுரை: அதிமுகவிற்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதிமுகவில் எங்களைத் தவிர அனைவரும் இளைஞர்கள் தான். அதிமுகவிலிருந்து மூன்று நபர்கள் தான் விலகி இருக்கிறார்கள். அவர்கள் சென்றதனால் எந்த ஒரு ஆபத்தும் எங்களுக்கு கிடையாது எனக் கூறியுள்ளார் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். 100 கிலோமீட்டர் ரோட் ஷோ தமிழக முதல்வர் சென்றாலும் அவருக்கு வரக்கூடிய தேர்தலில் வெற்றி கிடைக்காது என்றும் சாடியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2014 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வழங்கப்பட்ட தங்க கவசம், கடந்த 26ஆம் தேதி மதுரை அண்ணாநகர் வங்கியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு பிறகு தற்போது பசும்பொனில் இருந்து காந்தி நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனா தங்க கவசத்தை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் மீண்டும் பாதுகாப்பாக வைத்தார் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," தெய்வீகத் திருமகனின் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவிற்காக ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்ட தங்க கவசம் கடந்த 26 ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கு எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற ஆயத்தமாக இருங்கள் என்று எடப்பாடி கூறினார். அதிமுகவிற்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதிமுகவில் எங்களைத் தவிர அனைவரும் இளைஞர்கள் தான். அதிமுகவிலிருந்து மூன்று நபர்கள் தான் விலகி இருக்கிறார்கள். அவர்கள் சென்றதனால் எந்த ஒரு ஆபத்தும் எங்களுக்கு கிடையாது. தாராபுரம் மற்றும் மதுராந்தகத் தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்கு, எங்களது பலத்தை நிரூபித்திருக்கிறது. 100 கிலோமீட்டர் ரோட் ஷோ தமிழக முதல்வர் விஜய் சென்றாலும் அவருக்கு வரக்கூடிய தேர்தலில் வெற்றி கிடைக்காது. ஒரு பைசா கொடுக்காமல் கூட நாங்கள் வெற்றி பெற்றோம் என்று கூறிய தமிழக வெற்றி கழகத்தினருடைய வெற்றி தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் என்ன நிலை என்று உங்களுக்கு தெரியும். பணமும் அன்பளிப்பு பொருட்களும் கொடுத்துதான் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. கடந்த ஆறு மாதத்தில் கடும் விலை ஏற்றம் கண்டுள்ளது. எந்த நல்ல பணிகளும் இந்த அரசால் செய்யப்படவில்லை." எனக் கூறினார்.திண்டுக்கல் சீனிவாசன்
இடைத்தேர்தல்
விஜய் ஆட்சியில் வெறும் 3% வளர்ச்சி.. ஆந்திராவுக்கு போன 3 கம்பெனிகள்! 1,418 வேலை வாய்ப்புகள் போச்சு!
முதல்வர் விஜய்
தமிழக வெற்றி கழகம்