இன்னும் 2 ஆண்டுகளில் அதிமுக நிலைமைதான் திமுகவுக்கும் வரும்” - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்

  • மதுரை: "அதிமுகவுக்கு இன்று ஏற்பட்ட இதே நிலைமை, இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும்" என தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் விட்டவர் தான் ஸ்டாலின். ஆனால் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் பிரதமர் வரும்போது பட்டு வேஷ்டி சட்டை அணிந்து குடும்பத்துடன் சென்று வரவேற்றனர்.

    Advertisement

    ஒரு நாள் கூட பாஜக பற்றியோ, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்போது பார்த்தாலும் ஆளுநரைப் பற்றி மட்டும் தான் பேசுவார்கள்.

    பாஜகவின் மிகப் பெரிய கொத்தடிமையாக 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடந்தது. உதயநிதியும் மோடியும் அமித் ஷா பற்றி எங்கேயாவது பேசியிருக்கிறார்களா? ஆனால், எங்கள் தலைவர் விஜய் முதல் மாநாட்டில் முதலிலேயே பாஜக எங்களது கொள்கை எதிரி என்று அறிவித்தவர். கொள்கையில் எப்போதும் சமரசம் கிடையாது என அறிவித்தவர்.

    Advertisement
    மதுராந்தகத்தில் முட்டை பரோட்டோ.. தாராபுரத்தில் வீச்சு பரோட்டோ.. திமுக - அதிமுகவை கிண்டல் செய்த நிர்மல் குமார்

    திமுகவும், அதிமுகவும் பாஜகவின் உதவியுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தவர்கள். உதயநிதி அரசியல் கத்துக்குட்டி மாதிரி பேசுகிறார். காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என ஒவ்வொரு இடத்திலும் சொல்கிறோம். தெளிவான கொள்கையை அறிவித்துவிட்டு வந்தவரைப் பார்த்துப் பேசுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை.

    எஸ்ஐஆர் முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்த்து போராடிய கட்சி தவெக. எஸ்ஐஆரில் தவறு நடந்துள்ளது என எதிர்ப்பு தெரிவித்தவர் விஜய். அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராடியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதிக்காத இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எஸ்ஐஆர் இல்லாமல் இருந்திருந்தால் தவெக 120 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்.

    Advertisement

    தாராபுரம் தொகுதி அதிமுக கோட்டை. அதில் அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு கொண்டு சென்றவர் எடப்பாடி பழனிசாமி. அவர் திமுகவோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது பிடிக்காமல்தான் தவெகவில் சேர்ந்தனர். எந்தக் காலத்திலும் அதிமுக சுலபமாக வெற்றிபெறும் அத்தொகுதிகளில், அந்த கட்சியை எடப்பாடி எந்த நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதற்கான சான்றுதான் இந்த தேர்தல் முடிவு.

    ஸ்டாலினும் உதயநிதியும்.. பாஜகவுக்கு மிகப் பெரிய கொத்தடிமை! 5 வருடம் பேசாதது ஏன்? சிடிஆர் கேள்வி

    அதிமுகவின் உண்மையான வாக்காளர்கள் தவெகவின் மீதும், விஜய் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டது. அடுத்து வருகிற எல்லா தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்.

    Advertisement

    தாராபுரம் அதிமுக கோட்டையாக இருந்தது. அங்கேயே மூன்றாவது இடத்துக்கு அக்கட்சி சென்றுவிட்டது. இனி எந்த தேர்தலானாலும் அதிமுக 3, 4-வது இடத்துக்கே செல்லும். இடைத்தேர்தலுக்கும், பொதுத்தேர்தலுக்கும் வேறுபாடு உள்ளது. இடைத்தேர்தலில் 2 வது இடம் கிடைத்ததே மிகப்பெரிய வெற்றியாக திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணுகிறார். தற்போது அதிமுகவுக்கு இன்று ஏற்பட்ட இதே நிலைமை 2 ஆண்டுகளில் திமுகவுக்கும் வரும்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    TVK leader CTR Nirmal Kumar has warned that the DMK will face the same situation in two years that the AIADMK is facing today.