“திமுக இனி 10 தொகுதிகளில் கூட ஜெயிக்க முடியாது”.. அடித்துச் சொன்ன தவெக அமைச்சர் நிர்மல் குமார்

  • மதுரை: "இனிமேல் திமுக ஆட்சிக்கு வர முடியாது. இப்போது ஜெயித்த தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது. வரும் காலங்களில் திமுகவுக்கு 10 தொகுதிகள் கூட கிடைக்காது என்பது 100% உறுதி" என தவெக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அன்பில் மகேஷ் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ஆதாரம் இல்லாமல் கைது செய்யப்படவில்லை, ஆதாரம் இருக்கிறது. குழந்தைகளுடைய பாதுகாப்பில் சமரசம் செய்து சான்றிதழ் கொடுப்பதற்காக எங்கிருந்து பண வசூல் செய்யப்பட்டது? யார் எவ்வளவு கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? வசூல் செய்து அன்பில் மகேஷுக்கு யார் கொடுத்தார்கள்? என ஆதாரம் இருக்கிறது.

    Advertisement

    இது இப்போது வந்த பிரச்சனை இல்லை, கடந்த இரண்டு வருடங்களாக இந்த மாதிரி வசூல் செய்யப்பட்டதாக பல புகார் வந்திருக்கிறது. இன்றைக்கு ஆதாரப்பூர்வமாக பல கல்வி நிறுவனங்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். 400 கோடிக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்கள் இருந்ததால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இனிமேல் திமுக ஆட்சிக்கு வர முடியாது. இப்போது ஜெயித்த தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது. வரும் காலங்களில் 10 தொகுதிகள் கூட கிடைக்காது என்பது உறுதி. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் தமிழக வெற்றிக் கழக கூட்டணி ஜெயிக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

    Advertisement

    மக்களும் மாற்றத்தை விரும்பி ஆட்சி நல்லபடியாக நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறார்கள். ஆதாரம் இருந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9 மணியில் இருந்து மாலை வரை அதிகாரிகளை சந்தித்து ஆய்வு நடத்தி முதல்வர் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். நாட்டு மக்களுக்கு என்ன நல்லது செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தவிர அவருக்கு வேறு எந்த சிந்தனையும் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    “DMK will never be able to come to power again. They won’t even be able to win the constituencies they have secured now. It is 100% certain that in the coming days, the DMK will not even manage to win 10 seats,” stated TVK’s CTR Nirmal Kumar.