அரைவேக்காடுதனமாக விவசாயிகள் கடன் தள்ளுபடி.. வாய் திறந்து பேசுவாரா விஜய் தம்பி.. ஆர்பி உதயகுமார்

  • மதுரை: விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடியில் அரைவேக்காடுத்தனமான அறிவிப்பால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள். விவசாயி பிரச்சனையில் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பாரா? இல்லை வாய் திறந்து பேசுவாரா விஜய் தம்பி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த தமிழ் மண்ணை ஆள வைத்த விவசாயிகளை இன்றைக்கு மண் சோறு சாப்பிட வைத்திருக்கிறார் நம்முடைய விஜய் தம்பி. பயிர் கடன் ரத்து அறிவிப்பில் எத்தனை திருத்தங்கள் கொடுப்பார் முதல்வர் விஜய் தம்பி.

    Advertisement

    முதல்வர் விஜய் தம்பி தேர்தலுக்கு முன்பாக என்ன சொன்னார் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் பெற்ற பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். இதை நம்பி வாக்களித்து தமிழ் மண்ணை ஆள வைத்த அந்த விவசாயிகள் இன்றைக்கு மண் சோறு சாப்பிட்டு போராடிக் கொண்டிருக்கிறார்களே அவர்களை கருணையோடு காப்பாற்ற கூடாதா?

    முதல்வர் ஆன பின் ஒரு லட்ச ரூபாய் உள்ளவர்களுக்கு 5,000 ரூபாய் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று 5932 கோடி மதிப்பிலான கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு கொடுக்கிறார். இது விவசாயி மத்தியிலே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இந்த அறிவிப்பு. ரூபாய் 5000 கடன் தள்ளுபடி என்பது வட்டிக்கு கூட உதவாது என்பது ஒரு சாதாரண குழந்தைக்கு கூட தெரியும் அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா நான் என விவசாயாக பிறக்க வேண்டும் என்று வசனம் பேசினார். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாமெல்லாம் சோற்றில கை வைக்க முடியும்.. இதுபற்றி தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் கடும் கண்டன தெரிவித்தனர்.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து ரூபாய் 75,000 கடன் தள்ளுபடி தொகையை அரசு உயர்த்தி அறிவித்தது. ஆனாலும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. இப்போது புதிதாக திருத்தம் செய்துள்ளார்கள்.. அதில் அனைத்து வகையான கூட்டுறவு நிறுவனங்களில் பணி பரியும் ஊழியர்கள், முன்னாள் நிர்வாகக் குழுவினர் இதில் இடம் பெறக் கூடாது இந்த அறிவிப்பு விவசாயம் மத்தியிலே மேலும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. 40 நாட்களில் ஒரு புதிய அரசை மதிப்பீடு செய்வது என்பது அவ்வளவு கண்ணியமான அரசியலாக இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ஆனால் இன்றைக்கு இந்த 40 நாட்களில் இதுவரை காணாத வகையில் ஒரு புதிய அரசின் அணுகுமுறை, அவர்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுகிறதா? முதலமைச்சர் நிர்வாகத்தின் மீது அக்கறை கொண்டு, மக்கள் மீது அக்கறை கொண்டு இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறா?அல்லது அரைகுறை அரைவேக்காடு உடன் அறிவிப்புகளை வெளியிட்டு விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டத்தை ஊக்குவிக்கிறாரா?
    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் இரண்டு முறை விவசாயிகளின் பயிர்‌ கடன்களை ரத்து செய்தார்.

    Advertisement

    மாற்றம், மாற்றம் என்று சொல்லி இப்போது நம்மையெல்லாம் ஏமாற்றத்திலேயே தள்ளி விடுகிறார் தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல? விஜய் தம்பி விவசாயிகள் பிரச்சனையில் கிணற்றில் போட்ட கல்லாக அமைதியாக இருப்பாரா? பதில் கொடுத்து பேசுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்" இவ்வாறு ஆர்பி உதயகுமார் கூறினார்.

    English Summary

    Ex-Min RB Udhayakumar slams half-baked crop loan waiver. He asks if CM Vijay will stay silent like a stone in a well or finally speak up for furious farmers.