சாத்தான்குளம் வழக்கில் ஜெயிலில் உள்ள காவலர்கள் குடும்பத்திற்கு முன்னாள் காவலர்கள் செய்த உதவி

  • மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும் காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. சிறை தண்டனை அனுபவித்து வரும் காவலர்களின் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் சீட் கிடைப்பதில்லை; பள்ளிகளில் அவர்களது குழந்தைகளை பிரித்துப் பார்க்கும் மனநிலையால் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என மாநில ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

    Advertisement

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர், ஏஸ்ஐக்கள் உள்ளிட்ட 9 காவலர்கள், தாங்களின் குற்றத்திற்கு இரட்டை தூக்கு தண்டனையை மதுரை மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.சிறை தண்டனை அனுபவித்து வரும் காவலர்களின் குடும்பத்தினர்கள் தற்போது எந்த விதமான, ஆதரவுகள் இன்றியும் குழந்தைகளை பள்ளிக்குகூட அனுப்பி படிக்க வைக்க முடியாது அளவுக்கு, எவ்வித வாழ்வாதாரம் இன்றி மிகவும் சிரமமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இவர்களது, குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில், மாநில ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடைபெற்ற விழாவில், சிறை தண்டனை பெற்ற காவலர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பொருளாதார உதவி வழங்கினர்.
    ஒவ்வொரு குடும்பத்திற்கும் தல ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.

    அதைத்தொடர்ந்து, மாநில ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கலியமூர்த்தி பேசுகையில், "சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற காவல் துறையினர் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது

    Advertisement

    தீர்ப்பு குறித்து நாங்கள் எதுவும் பேச முன்வரவில்லை. ஆனால் தண்டனை பெற்றுள்ள காவலர்களின் குடும்பத்தினர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகள் படிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களை பள்ளியிலேயே பிரித்துப் பார்க்கக் கூடிய அளவிற்கு சாத்தான்குளம் என்ற பெயரில் அழைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் மன உளைச்சலை சந்திக்கின்றனர் எத்தனையோ வழக்குகளை பார்த்த நிலையில், இந்த வழக்கில் சிறையில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர்கள். மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே அரசும், காவல்துறையினரும், பொதுமக்களும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

    English Summary

    Association of former police personnel providing aid to the families of police personnel serving prison sentences in the Sathankulam case.