விஸ்வரூபம் எடுக்கும் FQL ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பான வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

  • மதுரை: FQL ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பான வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து புகார்கள் குவிந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. FQL டிரேடிங் செயலி மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என கூறி ரூ. 1000 கோடி அளவுக்கு மோசடி அருகேறியுள்ளது.

    Advertisement

    மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், FQL Exchange மற்றும் VG Investment ஆகிய போலி செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது.

    Advertisement

    பணத்தை இரட்டிப்பாக்குவதாக ஆசை காட்டி சுமார் ரூ. 1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. QL ஆன்லைன் முதலீடு மோசடி குறித்து காவல் நிலையங்களில் குவியும் ஆயிரக்கணக்கான புகார்களால் பரபரப்பு நிலவுகிறது.

    FQL ஆன்லைன் டிரேடிங் முதலீடு மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏமாற்றமடைந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை தரும் நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. FQL மோசடி தொடர்பாக மனுக்களை பெற தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து புகார்கள் குவிந்த நிலையில் இதுவரை இந்த மோசடி தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், FQL ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பான வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    The case regarding the FQL online investment scam has been transferred to the Economic Offences Wing. This move follows a flood of complaints from the Madurai and Dindigul districts. A fraud amounting to approximately ₹1,000 crore was perpetrated by promising doubled returns on cryptocurrency investments made through the FQL trading app.