கரூர் கூட்டநெரிசல்: அரசுப்பணி ரத்து.. நீதிமன்றம் சொன்ன காரணங்கள் என்ன? நாதக வழக்கறிஞர் விளக்கம்

  • சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால், அரசு வாகனங்கள் மோதி உயிரிழப்பவர்களுக்கு நீங்கள் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கவீர்களா? என்ற முக்கியமான கேள்வியையும் நீதிபதி முன் வைத்தார் என்று நாதக வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். மேலும் இது தமிழகத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பு என்றும், படிக்கின்ற பசங்களுக்காக, லட்சக்கணக்கான மாணவர்களுக்காக நாங்கள் நீதிமன்றத்தை நாடியது அவங்களுக்கு பெரும் துணையாக இருந்துள்ளது என பேசினார்.

    Advertisement

    தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினர் 31 பேருக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார். இதற்கு எதிராக நாம் தமிழர் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    சிவகாசி விபத்து - அரசு பணி வழங்க முடியுமா?

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கரூரில் அரசுப் பணி வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் நீதிபதி, பாதிக்கப்பட்டவர்ளுக்கு பணம், பொருளாதார உதவிகளை வழங்கலாம். கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண அரசு பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக வாரிசுகள் காத்திருக்கும் போது, இவர்களுக்கு எப்படி வழங்க முடியும்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கி தொழில் தொடங்குபவர்களாக மாற்றலாமே.. சிவகாசி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், நாதக வழக்கறிஞர் கிளீட்டஸ் நீதிபதி கூறியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும்

    நல்ல தீர்ப்பு வந்து இருக்கிறது. தமிழகத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பு இது. கருணை அடிப்படையில் இவர்களுக்கு வேலை வழங்கலாமா? வழங்கக் கூடாதா? என்ற ஒரு சட்டச் சிக்கல் இருந்து வந்தது. இதனை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் ஒரு மனு போட்டோம். இங்கே இருக்கின்ற சட்டத் திட்டத்தின் படி அரசுப் பணி கொடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் படிதான் பணியானது கொடுக்க வேண்டும்.

    அரசியலமைப்பை வைத்தே நாங்கள் எங்கள் வாதத்தை முன் வைத்தோம். இந்த தீர்ப்பை பொறுத்து தான் இனி கருணை அடிப்படையில் பணி வழங்கினால், இந்த தீர்ப்பு தான் முன்னுதாரணமாக இருக்கும். ஏற்கனவே வாரிசு அடிப்படையில் நிறைய பேர் கியூவில் நிற்கிறார்கள். அரசு வாகனங்கள் மோதி உயிரிழப்பவர்களுக்கு நீங்கள் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கவீர்களா? என்ற முக்கியமான கேள்வியையும் முன் வைத்தார்கள்.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி ஒரு வாதம் மட்டுமே வைத்தது

    மேலும் அரசு சார்பில் 4 வழக்குகளை உதாரணம் காட்டினார்கள். ஒன்று ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, 2வது மதுரை மாநகரில் லீலாவதி படுகொலை, மூன்றாவது ஒரு எக்ஸ் சர்வீஸ் மேனின் மகனுக்கு வேலைவாய்ப்பு, 4 வது எஸ்.சி எஸ்டி அடிப்படையில் வேலைவாய்ப்பு கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் இந்த 4 வழக்குகளிலும் கரூர் சம்பவம் எப்படி தொடர்புப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினோம். ஆனால் அதற்கு முறையாக அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை.

    படிக்கின்ற பசங்களுக்காக, லட்சக்கணக்கான மாணவர்களுக்காக நாங்கள் நீதிமன்றத்தை நாடியது அவங்களுக்கு பெரும் துணையாக இருக்கும் என்பதை இப்போது சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். டிஎன்பிஎஸ்சி ஒரே வாதம் மட்டுமே சொன்னார்கள். எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொன்னார்கள். வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஸ்டெர்லைட் என்பது ஒரு அரசில் நடந்த, அரசினுடைய மிஸ்டேக்.. கரூர் வழக்கில் அப்படி இல்லை. கரூர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே அதனை நான் சொல்ல முடியாது.

    English Summary

    Karur Stampede: A lawyer representing the NTK explained that a crucial question was posed to the judge: "If government jobs are granted to those who died in the Karur crowd crush, will you also provide government jobs on compassionate grounds to those who lose their lives after being hit by government vehicles?"