பைக்கின் பின் சீட்டில் அமர்ந்திருந்தால் இளைஞருக்கு உற்சாகம்தான் ஏற்படும்! மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள்

  • மதுரை: பைக்கின் பின் இருக்கையில் காதலி அமர்ந்திருந்தால் இளைஞருக்கு உற்சாகம் ஏற்படுவது இயல்புதான் என்று விபத்து வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் (19). இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பைக்கில் வீரபாண்டி- வலையபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். பைக்கின் பின் சீட்டில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    Advertisement

    திடீரென எதிரே வந்த வேனும் பைக்கும் மோதியது. இதில் படுகாயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அந்த பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கோபாலின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த தேனி நீதிமன்றம், அவர்களுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கும்படி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் மதுரை ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அமர்வு விசாரித்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விபத்துக்கு பைக்கை ஓட்டி வந்த கோபாலும் ஒரு காரணம். எனவே இழப்பீட்டுத் தொகையை பாதியாக குறைத்திருக்க வேண்டும் என வாதம் செய்தார்.

    Advertisement

    பின்னர் மனுதாரர்களின் வழக்கறிஞர் ஆஜராகி, "நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதில் தலையிடத் தேவையில்லை" என வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது.

    பைக்கை ஓட்டிய 19 வயது இளைஞரின் பின் சீட்டில் அவரது காதலி இருந்தார். அவ்வாறு காதலி பின் சீட்டில் அமர்ந்திருக்கும் போது எந்தவொரு டிரைவருக்கும் சாதாரணமாக உற்சாகம் ஏற்படும்.

    வரைபடத்தை பார்த்தாலே, இது நேருக்கு நேர் மோதிய விபத்து என்பது தெளிவாகிறது. வேன் சரியான திசையில்தான் வந்து கொண்டிருந்தது. ஆனால் பைக் தான் தவறான திசையில் சென்றது. இது போக்குவரத்து விதிமீறலாகும்.

    Advertisement

    இறந்தவரின் கவனக்குறைவும் இந்த விபத்துக்கு காரணம் என நாங்கள் கருதுகிறோம். அவரது பங்கு 25 சதவீதம் என நிர்ணயிக்கிறோம். அதற்கேற்ப இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    English Summary

    Madurai Highcourt observed that in a road accident case, it is natural for a youth if his girl friend to feel excited when she is seated in pillion.