அரசு ஊழியர்கள் ஒழுங்காக இருக்கனும்.. ஊழலை சற்றும் சகித்துக் கொள்ள முடியாது! உயர்நீதிமன்றம் உறுதி!

  • மதுரை: பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியர் ஒரு குற்ற வழக்கில், குறிப்பாக ஊழல் வழக்கில் சிக்குவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது எனவும், அரசு இப்பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட அரசு ஊழியர் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையின் போது லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களான சுனிதா அகிலின் மெபெல், இட்டுராஜ், கணேசமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

    Advertisement

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "இந்த வழக்குகளில் குற்ற வழக்கு, லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் எந்தப் பணியும் செய்யாத நிலையில் அவர்களுக்கு பல ஆண்டுகளாக பிழைப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஒருவரின் ஒழுங்கீனச் செயலுக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அவர் மீது குற்றவியல் வழக்கு ஒரு தடையாக அமையாது. இருப்பினும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடத்தை விதிகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.

    Advertisement

    குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசுப் பணியில் நுழைவது நிர்வாகத்தின் தூய்மையைப் பாதிக்கும். ​​பணியில் இருக்கும் ஒரு அரசு ஊழியர் ஒரு குற்ற வழக்கில், குறிப்பாக ஊழல் வழக்கில் சிக்குவதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

    தற்போதைய அரசு ஊழலை சற்றும் சகித்துக் கொள்ளமாட்டோம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்குவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறது. எனவே நடத்தை விதிகளை மீறி ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அது ஊழலுக்கு எதிரான வலுவான செய்தியாக இருப்பதுடன், மற்ற அதிகாரிகளுக்கும் பயத்தை அளிப்பதாக இருக்கும்.

    Advertisement

    எனவே அரசு இப்பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட அரசு ஊழியர் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். எனவே மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை 6 மாதத்தில் முடிக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டியது வரும்" இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

    English Summary

    High Court Madurai Bench urges Tamil Nadu government to amend conduct rules and complete disciplinary action against employees facing corruption cases within six months.