மதுரை: கரூர் 3,085 ஏக்கர் கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கிய அரசாணைக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட நிலங்களின் எந்த பத்திர பதிவு மேற்கொள்ளக்கூடாது என தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடை விதிக்க கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசு இந்த விவகாரத்தில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பத்திர பதிவு செய்தால் நாளை மற்றொரு தரப்பினர் இடத்தை வாங்கி ஏமாறக்கூடிய சூழல் ஏற்படும் அப்பாவி பொதுமக்கள் ஏமாறக்கூடிய சூழல் ஏற்படும் இதை அனுமதிக்க முடியாது எனவும், இதனாலேயே இடைக்கால தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு," கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இதில் 3,390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கபட்டது. இந்த நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 3,085 ஏக்கர் கோவில் நிலங்களுக்கு பத்திர பதிவுக்கான தடையை நீக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் நிலங்களை பட்டா மாறுதல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே தமிரக அரசின் அரசாணையை ரத்து செய்தும், அதுவரை தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வேல்முருகன் கே கே ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி கோவில் நிலங்கள் பத்திர பதிவு செய்வதற்கு ஏற்கனவே தடை இருந்தது அந்த தடையை ஒரே நாளில் தமிழக அரசு ரத்து செய்து பத்திரப்பதிவு செய்யலாம் என உத்தரவு பிறப்பித்தது இதனால் கோவில் நிலங்கள் பரிபோகம் நிலை உள்ளது எனவே அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் இடைக்கால தடை ஏதும் விதிக்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது குருக்கிட்ட நீதிபதிகள், பத்திர பதிவு செய்தால் நாளை மற்றொரு தரப்பினர் இடத்தை வாங்கி ஏமாறக்கூடிய சூழல் ஏற்படும் அப்பாவி பொதுமக்கள் ஏமாறக்கூடிய சூழல் ஏற்படும் அதை அனுமதிக்க முடியாது. சிறுக சிறுக பணம் சேர்த்து வாழ்க்கையை பணயம் வைத்து வாங்கிய சொத்தை இழக்க கூடிய நிலை ஏற்படும். அதை தவிர்க்கவே தற்போது இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கின்றோம் அரசு தரப்பில் விரிவாக வாதிட விரும்பினால் அனைத்து தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்து வாதிடலாம் என தெரிவித்தார்கள். அப்பொழுது அரசு தரப்பில் குறிப்பிட்டு மனுதாரர் உள்நோக்கம் கொண்டு தற்போது இந்த வழக்கை முறையீடு செய்து உள்ளார் பத்திரப்பதிவு ஏதும் நடைபெறவில்லை அவ்வாறு உள்ள சூழலில் பத்திரப்பதிவு செய்யப் போவதாக மனுதாரர் தெரிவிக்கிறார் இதில் உள்நோக்கம் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள் எந்த உள்நோக்கமும் யாருக்கும் இல்லை இது பொது நலன் சார்ந்தது கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு நடைபெற்று விட்டால் வழக்கு நிலை முடிந்து விடும் அதை அனுமதிக்க முடியாது வழக்கை நடத்தி எது சரி எது தவறு என முடிவு செய்யலாம் எப்பொழுதும் இல்லாமல் அரசு இந்த விவகாரத்தில் மூத்த அரசு வழக்கறிஞர் அனைவரும் ஆஜராகி வாதிடு வகையில் என்ன முக்கியத்துவம் உள்ளது என தெரிவித்து. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலங்களை பத்திரப்பதிவுத்துறை எவ்வித பத்திரமும் பதிவும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.7 மணி நேர அனுமதி.. 6 நாளில் அசாம் டூ மதுரை! கோவில் யானை விற்பனையில் பாஜக - தவெக அரசு முறைகேடு?
திருப்போரூர் கோவில் நிலம்..50 கடைகள் கட்டி உள்வாடகைக்கு விட்டு பெரும் சம்பாத்தியம்..பாய்ந்த நடவடிக்கை