கோர்ட் சொன்னா கேட்க மாட்டீங்களா? 8 ஐஏஎஸ், ஐபிஎஸ் மீது அவமதிப்பு வழக்கு! HRCE-ஐ விளாசிய ஹைகோர்ட்!

  • மதுரை: கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோரிய வழக்கில், தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை செயல்பாட்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலுக், தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்துள்ளது. வருவாய்த் துறை செயலாளர், உள்துறைச் செயலர், நில எடுப்பு ஆணையர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் IG, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.

    Advertisement

    மேலும், நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலை துறையின் ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தபெற்ற 100 ஆண்டுகள் பழமையான கோயில் இது.

    கரூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது. இந்த கோயிலுக்கு செந்தமாக 3054ஏக்கர் நிலங்கள் இருந்தன இதில் தற்போது 150 ஏக்கர் தான் கண்டறியப்பட்டது அந்த நிலங்களும்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலங்களின் தற்போதைய மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பாகும் இந்த நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கபட்டு அதில் வணிக வளாகங்கள் குடியிருப்பு வீடுகள் என கட்டபட்டுள்ளது.

    Advertisement

    கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறநிலைய துறை மாவட்ட நிர்வாகத்திற்க்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சட்டவிரோதமாக கோயில் இடங்களை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2018 ல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கல்யாண பசுபதிஈஸ்வரர் கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும்.

    நோட்டீஸ் வழங்கி அவர்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். இதில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த நடவடிக்கைகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் உத்தரவுகளை மீறி சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    Advertisement

    இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலைத்துறையின் இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    பீர் பாட்டிலுக்கு கூடுதல் விலை.. ரூ.1 கோடி அபராதம் விதித்து கடையை மூட உத்தரவிட்ட நீதிமன்றம்!

    இந்த மனு நீதிபதி வேல்முருகன் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்பின்வரும்

    Advertisement

    எதிர்மனுதாரர்கள் தாமாக முன்வந்து இணைக்கப்படுகிறார்கள்: K.S. பழனிசாமி, வருவாய்த் துறைசெயலாளர், A. கார்த்திக், உள்துறை, செயலாளர், ​V. ராஜாராமன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, செயலாளர், B. சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர், ராகேஷ் லக்கானி, நில நிர்வாக ஆணையர், ​திரு. T.G. வினய்,, இந்து சமய மற்றும் அறநிலையங்கள் ஆணையர், V. பாலகிருஷ்ணன், மத்திய மண்டலம், காவல் துறை தலைவர் திருச்சிராப்பள்ளி, ​C. முத்துக்குமரன், மாவட்ட ஆட்சியர், கரூர் ஆகியோர் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகின்றனர்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் வினய் வரும் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்தும், இந்த வழக்கின் தற்போதைய நிலை என்பது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

    English Summary

    Madurai Bench initiates contempt proceedings against eight senior Tamil Nadu officials over alleged failure to act on Karur temple land encroachments.