மதுரை: தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்? விபரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏன் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கிறீர்கள்? 10 முதல் 20 ஆண்டுகள் வேலை வாங்கி கொண்டு முறைப்படுத்த மறுப்பது ஏன்? எனவும் தமிழக அரசை நோக்கி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருநெல்வேலி வேளாண்துறை விற்பனைக் குழுவில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும்
தனுஷ்கோடி தன்னை பணி வரன்முறை செய்து பணப்பலன்களை வழங்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்து அரசுத்தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் கடந்த 2021ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், பணி வரன்முறை செய்து பணப்பலன்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தனுஷ்கோடி தொடர்ந்த வழக்கை னி நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர் மனு செய்தபோது 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை. தொகுப்பூதியம் அடிப்படையில் மனுதாரர் பணியில் தொடர்கிறார். வரன்முறைப்படுத்த தகுதியற்றவர் என வாதிடப்பட்டது. விசாரணை முடிவில், மனுதாராரின் கோரிக்கையை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க, விற்பனைக்குழு செயலாளருக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என துறையின் நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, "ஏன் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கிறீர்கள்? 10 முதல் 20 ஆண்டுகள் வேலை வாங்கி கொண்டு முறைப்படுத்த மறுப்பது ஏன்? அரசு தரப்பில் தவறு செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிவரன்முறை கோரிக்கை எழுப்பினால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்? உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.31ம் தேதி கடைசி நாள்.. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்வது எப்படி ?