அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசு சொன்ன பதில்! ஹைகோர்ட் போட்ட ஆர்டர்!

  • மதுரை: அரசு பணியின் போது பணம் வைத்திருந்தவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்பான விசாராஇயில், பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்திருக்கலாம் என்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது. இதனைய பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ​ கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையால் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னை உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் கலா என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில்," திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளராகப் கடந்த 2021 ஆண்டு பணியின் போது ரூ.45,000 வைத்திருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் சோதனையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.

    Advertisement

    இந்நிலையில் தான் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மணி நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் சொந்த செலவுக்காக வைக்கப்பட்டிருந்த பணம் என தெரிவிக்கப்பட்டது

    அரசுத்தரப்பில், பதிவுத்துறையின் தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை படி பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக் கூடிய பண வரம்பு குறித்தும், இது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    Advertisement

    இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அரசு ஊழியர்கள் பணியின் போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. சிறிது கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இடமிருந்து நீதிமன்றம் சில விவரங்களை பெற விரும்புகிறது. அதனை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதில், ​ கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையால் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் எண்ணிக்கை, ​ஆய்வுகளின் போது எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது.? இந்த ஆய்வுகளின் மூலம் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? ​அவற்றின் தற்போதைய நிலை என்ன? சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பின், அதன் விவரங்களை அறிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

    English Summary

    Madurai Bench asks Tamil Nadu government to decide cash limits for employees and seeks five-year DVAC raid and case details.