மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு.. அறநிலையத்துறை அரசியல் செய்தது உண்மை.. நேரடியாக சாடிய நீதிமன்றம்!

  • மதுரை: மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சாடியுள்ளது. மக்கள் அமைதியை தேடி வரக்கூடிய இடத்தில் அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ள நீதிமன்றம், குடமுழுக்கு முடிந்தபின் கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் கண்டிப்பாக அறங்காவலர் குழு பெயர் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர் குழுவின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டன. இதன் பின்னணியில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் இருப்பதாக சொல்லப்பட்டது.

    Advertisement

    திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட அறங்காவலர் குழு என்பதால், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் வேண்டுமென்றே அவர்களின் பெயர்களை போடக் கூடாது என்று உத்தரவிட்டதாக முனுமுனுக்கப்பட்டது. இந்த நிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ல் நடக்க உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு பெயர் நீக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் கோயில் அறங்காவலர் குழுவின் கடமையை செய்ய தடையோ, இடையோ செய்யாமல் ஒத்துழைப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்.

    Advertisement

    மதச்சார்பற்ற பணிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சரவணன், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். கோயில் செயல் அலுவலர் தான் அறங்காவலர் பெயர்களை நீக்கியுள்ளார்.

    அவர் சுயமாக இந்த முடிவை எடுத்துள்ளார். இணை ஆணையர் செல்லத்துரை தனது பெயரை பத்திரிக்கையில் பதிவு செய்துள்ளார். குடமுழுக்கு விழாவில் அறங்காவலர் பெயர் விடுபட்டது தவறு என்றார். அப்போது அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு, 3000 பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், மீண்டும் பத்திரிக்கை கொடுக்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தார்.

    Advertisement

    தொடர்ந்து நீதிபதி, பத்திரிக்கையில் அறங்காவலர் குழு பெயர் விடுபட்டது தவறு. அதேபோல் குடமுழுக்கு முடிந்தபின் கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் கண்டிப்பாக அறங்காவலர் குழு பெயர் இடம்பெற வேண்டும். கோயில் என்பது மக்கள் அமைதியை தேடி வரக்கூடிய இடம். இந்த இடத்தில் அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது. இங்கு அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

    வரும் காலங்களில் மத வழிபாட்டு தலங்களில் எந்தவிதமான அரசியல் நிகழ்வும் இல்லாமல் விதிகளின்படி நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அப்போது அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது என்ற வார்த்தையை தீர்ப்பில் இருந்து நீக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ஏற்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    English Summary

    Madurai High Court Slams HR & CE Department Over Politics in Meenakshi Amman Temple Consecration