தவெக எங்களை ஏமாத்துது! மீனாட்சியம்மன் குடமுழுக்கில் புனித நீருக்கு பதில் குடிநீரை தெளித்த நிர்வாகம்

  • மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வியாழக்கிழமை மகா குடமுழுக்கு விழா மிக விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே கோயில் வீதிகளில் திரண்டு காத்திருந்தனர்.

    Advertisement

    ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகப் பெருவிழாவில், "கோயில் நிர்வாகம் மக்களை ஏமாற்றுகிறது" எனக் கூறி பக்தர்கள் ஆவேசமாகக் குரலெழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கலச நீர் கிடைக்காமல் ஏங்கிய பக்தர்கள்

    இன்று காலை கோபுர கலசங்களுக்கும் தங்க விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது. கோபுரத்தின் மீது ஊற்றப்படும் புனித நீர்த்துளிகள் தங்கள் மீதும் பட வேண்டும், அதன் மூலம் மீனாட்சியம்மனின் ஆசி தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பல மணி நேரம் வெயிலையும் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பாதுகாப்புத் தடுப்புகள் காரணமாகச் சாதாரண மக்கள் நின்றிருந்த பல பகுதிகளுக்குக் கோபுரக் கலசங்களிலிருந்து தெளிக்கப்பட்ட நீர் துளியளவும் வந்து சேரவில்லை. விஐபிகள் மற்றும் சிறப்புப் பிரமுகர்கள் நின்றிருந்த பகுதிகளில் மட்டுமே புனித நீர் தாராளமாகத் தெளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    குடிநீரைக் கொண்டு வந்து தெளித்த போலீஸ்?

    வெளியே நின்ற மக்கள் புனித நீர் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கோஷமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர், நிலைமையைச் சமாளிக்க வினோதமான செயலில் இறங்கினர்.

    அங்கிருந்த குடிநீர் தொட்டியிலிருந்தும் பாத்திரங்களிலிருந்தும் சாதாரண குடிநீரை மொண்டு கொண்டு வந்து, "இதுதான் கலசத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீர்" எனக் கூறி பக்தர்கள் மீது தெளித்துள்ளனர்.

    முதலில் பக்திப் பரவசத்துடன் கையேந்திய மக்களுக்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே அது யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அல்ல, சாதாரண குடிநீர்தான் என்பது தெரியவந்தது. குடமுழுக்கு புனித நீருக்கான எந்த நறுமணமோ அடையாளமோ இல்லாமல், அவசர அவசரமாகப் பாத்திரங்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீரைப் பார்த்ததும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    Advertisement

    பக்தர்களை ஏமாற்றுகிறீர்களா? - கொந்தளித்த மக்கள்

    தங்களுக்குச் சாதாரண தண்ணீரைக் கொண்டு வந்து புனித நீர் என்று ஏமாற்றித் தெளித்ததைக் கண்ட பக்தர்கள், அந்த இடத்திலேயே காவல்துறையினரையும் கோயில் நிர்வாகத்தையும் முற்றுகையிட்டுக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    17 வருஷம் தவமிருந்து மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தைக் பார்க்க வந்தோம். கோயிலுக்குள்ளேயும் விடல, அம்மனையும் ஒழுங்கா காட்டல. கடைசியில ஒரு சொட்டு புனித நீர் கூட எங்களுக்குக் கிடைக்க விடாம, சாதாரண தண்ணீரைக் கொண்டு வந்து முகத்துல தெளிச்சு எங்களை ஏமாத்துறீங்களா? பக்தர்களின் நம்பிக்கையோடு விளையாட நிர்வாகத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" என்று தாய்மார்களும் முதியவர்களும் ஆவேசமாகக் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    பக்தர்களின் கோபம் எல்லை மீறியதால், அங்கிருந்த போலீஸார் மேற்கொண்டு தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு அமைதி காத்தனர்.

    நிர்வாகத்தின் அலட்சியத்துக்குக் கண்டனம்

    ஆண்டுக் கணக்கில் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு மகா குடமுழுக்கு விழாவில், ஆன்மிக மரபுகளைக் காற்றில் பறக்கவிட்டு, சாதாரண தண்ணீரைக் கொண்டு வந்து புனித நீர் எனத் தெளித்து ஏமாற்றும் அளவிற்கு நிர்வாகச் சீர்கேடு சென்றிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோடி கோடியாகச் செலவு செய்து நடத்தப்பட்ட இந்தத் திருக்குடமுழுக்கு விழாவில், பக்தர்களின் அடிப்படை பக்தி உணர்வை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மண்ணில் திரண்ட பக்தர்கள் கொதிப்புடன் வலியுறுத்தி வருகின்றனர்.

    English Summary

    Madurai Meenakshi Kumbabishekam: Devotees Outraged as Sprinkle Plain Drinking Water Instead of Holy Water at