மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை விவகாரம்.. சார்லஸ் மார்ட்டினுக்கு எதிராக தேவர் கூட்டமைப்பு பேட்டி

  • மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்ப்பட்டால் எங்களது கூட்டமைப்பு சார்பில் எந்த எல்கைக்கைக்கும் போக தயங்க மாட்டோம் என தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.உண்மைக்குப்புறம்பான தவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    Advertisement

    மதுரை மாட்டுத்தாவணி எதிர்புறமுள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் வைத்து தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது‌ . இச்சந்திப்பில் தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிவி.கதிரவன். திருமாறன் ஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    Advertisement

    அப்போது அவர்கள் கூறும் போது, தென் மாவட்ட மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை குறைந்த செலவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தை டாக்டர் N சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன் டாக்டர் S. குருசங்கர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்று மத்திய மாநில அரசுகளால் சிறப்பான மருத்துவ சேவைக்கான நோயாளிகள் பயன்பெறும் வகையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது..

    Advertisement

    சமீபத்தில் சில குடும்பங்கள் தற்பொழுது இம்மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத. மக்களால் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டு பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்து இந்தியாவில் வாழ்வாதாரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோ மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் தேவர் சமுதாயத் தலைவரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டு இன்றுவரை தென் மாவட்ட மக்களால் சிறந்த மருத்துவமனை என்று போற்றப்படும் இம்மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் செய்தி சேனலில் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோ மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினை சமுதாயத்தின் சார்பாக எச்சரிக்கிறோம்.

    Advertisement

    மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப்புறம்பான செய்திகளை பரப்பி மக்களிடம் தவறாக எண்ணத்தை ஏற்படுத்திய செய்தியை லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் செய்தி சேனலில் இருந்து முற்றிலும் இம்மருத்துவமனை பற்றிய அனைத்து தவறான செய்திகளையும் நீக்கவேண்டும். மற்றும், இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பை தெரிவிக்க வேண்டும்.

    மன்னிப்பு கோராத பட்சத்தில் தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் முன்பு அனைத்து மாவட்டங்களிலும் எங்களின் சமுதாய மக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். அதோடு மீண்டும் இது போன்று தொடர்ந்து செயல்ப்பட்டால் எங்களது கூட்டமைப்பு சார்பில் எந்த எல்கைக்கைக்கும் போக தயங்க மாட்டோம் என்றார்கள். மேலும் உண்மைக்குப்புறம்பான தவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்‌ என்றார்கள்.

    English Summary

    The Federation of Thevar Community Leaders has announced that they will not hesitate to go to any lengths if actions tarnishing the reputation of the Madurai Meenakshi Mission Hospital administration continue. They urged the Tamil Nadu government to take appropriate action against Jose Charles Martin for bringing false and misleading information to the government's attention.