மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வைக் காண மேற்கு வாசல் வீதியில் மக்கள் குவிந்த நிலையில் சிறப்பு பாஸ் இருந்தால் அனுமதி என போலீசார் கூறிய நிலையில் பேரிகார்டுகளை தகர்த்து நுழைந்தனர். இதில் சிலர் கீழே விழுந்தனர். போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்கு பின், இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை, 7:40 மணிக்கு மீனாட்சி அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9,000 பேர் கோவில் மேல் தளத்தில் அனுமதிக்கப்பட்டனர். காலை, 10 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், 18 ஆம் தேதி வரை கோவில் பகுதியில் ரோட்டோர கடைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தை காண சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் சிரமம் இன்றி வந்து செல்லவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாக்ம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குடமுழுக்கு நிகழ்வை நேரில் காண ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், போலீசார் அருகில் அனுமதிக்காமல், எல்.இ.டி திரைகள் வாயிலாக பார்க்குமாறு அறிவுறுத்தினர். "LED ஸ்கிரீன்ல போய் பாருங்கனு போலீஸ் சொல்றாங்க.. அதுக்கு வீட்லயே டிவியில பார்த்துருப்போமே. எதுக்கு கோயிலுக்கு வரனும்? 4 வீதியில் எங்கேயும் உள்ள விடாததால, சுத்திக்கிட்டே இருக்கோம்" என பக்தர்கள் அதிருப்தி அதிருப்தி தெரிவித்தனர். மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வைக் காண மேற்கு வாசல் வீதியில் மக்கள் குவிந்த நிலையில் சிறப்பு பாஸ் இருந்தால் தான் அனுமதி என போலீசார் கூறிய நிலையில் பேரிகார்டுகளை தகர்த்து நுழைந்தனர். இதில் சிலர் கீழே விழுந்தனர். போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டினர்.