எங்களுக்கு பாஸ் கொடுக்கல.. ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு மட்டும் விஐபி பாஸ்.. வேதனையோடு நின்ற பக்தர்கள்!

  • மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான விஐபி பாஸ்கள் முறையாக அளிக்கப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மூலமாக பாஸ் கொடுக்கப்பட்டதாகவும், மதுரை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பலருக்கும் விஐபி பாஸ் அளிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    17 ஆண்டுகளுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்திருக்கிறது. காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒலிக்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்களின் கோஷம் விண்ணை எட்டியது. தொடர்ந்து டிரோன்கள் மூலமாக சில பகுதிகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

    Advertisement

    அதேபோல் காலை 10 மணி வரை கோபுர வீதிகளிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே கோயில் மேல் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் யாருக்கும் உரிய முறையில் பாஸ் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    வழக்கமாக மீனாட்சியம்மன் கோயில் நிகழ்ச்சிகளுக்கு 11 ஆயிரம் பாஸ்கள் வழங்கப்படும். ரூ.1 லட்சத்திற்கு மேல் நன்கொடை கொடுக்கும் நபர்களுக்கு பாஸ் அளிக்கப்படும். இதனை கோயில் அறங்காவலர்கள் குழு ஒருங்கிணைத்து செய்யும். ஆனால் இம்முறை அறங்காவலர்கள் குழுவை ஓரம்கட்டிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தரப்பு, சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிக பாஸ்களை தனது ஆதரவாளர்களுக்கு எடுத்து சென்றிருக்கிறது.

    Advertisement

    குறிப்பாக மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு குடமுழுக்கு விழாவுக்கான பாஸ் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் தவெக எம்எல்ஏ-க்கள் நூற்றுக்கணக்கான பாஸ்களை எடுத்து சென்றிருக்கின்றனர். இதுதொடர்பாக பக்தர்கள் பேசுகையில், பக்தர்களுக்கு முறையாக பாஸ் சென்று சேரவில்லை. கூட்டமே இல்லாமல் போலீஸ் பக்தர்களை அடைத்து வைத்துவிட்டார்கள்.

    எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. கோயில் கோபுரத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே புனித நீர் தெளிக்கப்பட்டது. அவர்களுக்கு மட்டுமே பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 10 ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால் குடமுழுக்கு விழாவுக்கு போதுமான கூட்டமே வரவில்லை. ஒரு டிரோன் வைத்து கூட புனித நீர் தெளிக்கப்படவில்லை. பழனி, திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.

    Advertisement

    அதனை பார்த்து தவெக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். போலீஸ் அராஜகம் அதிகமாக இருக்கிறது. அறநிலையத்துறை உறுதுணையாக இருக்கவில்லை. இரவு 2 மணியில் இருந்து உட்கார்ந்து இருக்கிறோம். ஏன் தீர்த்தம் தெளிக்கவில்லை? இதனை டிவியில் இருந்தே பார்த்துவிடுவோமே.. கும்பாபிஷேகத்தில் கொஞ்சம் கூட திருப்தியில்லை என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Madurai Meenakshi Temple: Devotees Allege VIP Pass Irregularities for Madurai Meenakshi Temple Consecration