Madurai: மதுரை மேலூர் சிறுவன் நாக்கு தள்ளி மர்ம மரணம்! சக சிறுவன், தாய் கைது! விசாரணையில் பகீர்!

  • மதுரை: மதுரை மேலூரில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சக சிறுவனையும் அவனது தாய் சந்தியா என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    இதுகுறித்து மதுரை எஸ்பி தேவநாதன் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருப்பதாவது: மதுரை மேலூர் சிறுவன் முத்துவேல் மரணத்தில் அவனுடன் விளையாடிய மற்றொரு சிறுவனுக்கும் அவனது தாய்க்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

    Advertisement

    இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது, முத்துவேலும் அந்த சிறுவனும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே விளையாடுவார்களாம். கழுத்தை இறுக்கினால், மயக்கமடைந்து மீண்டும் எழுந்துவிடுவார்கள் என்பதை எங்கேயோ பார்த்துவிட்டு அதை அடைக்கலம் காத்த அம்மன் கோயில் அருகே அந்த சிறுவன் முத்துவேலிடம் விளையாட்டுத்தனமாக விளையாடியுள்ளான்.

    அடுத்தடுத்து தமிழகத்தை உலுக்கும் சம்பவங்கள்: மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் இன்று சடலமாக மீட்பு!

    முத்துவேல் கழுத்தை இறுக்கிய சிறுவன்

    ஒரு கயிறு மூலம் முத்துவேலின் கழுத்தை இறுக்கினானாம். அப்போது முத்துவேலின் நாக்கு வெளியே வந்து தடுமாறியுள்ளான். உடனே அஞ்சிய சிறுவன் தனது வீட்டிற்கு ஓடிவிட்டானாம். இதையடுத்து தண்ணீர் கேட்டு அந்த சிறுவனின் வீட்டிற்கு முத்துவேல் சென்ற போது சரிந்து விழுந்து மரணமடைந்துவிட்டான்.

    Advertisement

    சிறுவனின் தாய் உடந்தை

    இதுகுறித்து சிறுவனின் தாய் சந்தியா கேட்டபோது அந்த சிறுவன் நடந்தவற்றை தெரிவித்தானாம். இதனால் தனது மகனுக்கு பிரச்சனை வந்துவிடும் என்பதால் இந்த விஷயத்தை போலீஸிடமோ முத்துவேலின் பெற்றோரிடமோ சொல்லாமல் தனது மகனை காப்பாற்ற அந்த தாய், முத்துவேலின் சடலத்தை தூக்கிக் கொண்டு ஒரு பாழடைந்த இடத்தில் போட்டுவிட்டாராம்.

    ஆதாரத்தை அழித்த சந்தியா

    இதனால் இந்த சம்பவத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அது போல் கொலைக்கான ஆதாரத்தை அழிக்க முயன்ற தாய் சந்தியாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    விளையாட்டால் விபரீதம்

    இந்த சம்பவத்தில் எந்த பின்னணியும் இல்லை, எந்த மோட்டிவும் இல்லை. விளையாட்டு வினையாகிவிட்டது என தேவநாதன் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகள் இது போன்ற ஆபத்தான விளையாட்டை விளையாடுவதை பார்த்தால் பெற்றவர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    Advertisement
    ஊத்தங்கரையில் டியூஷன் செல்வதாக கூறி சென்ற சிறுவன் மாயமான வழக்கில் திடீர் ட்விஸ்ட்! ஷாக்கான போலீஸ்!

    நடந்தது என்ன?

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (42). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    தந்தை வெளிநாட்டில்

    பெரியகருப்பன் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறாராம். சத்யாவும் விவசாய கூலி வேலைக்கு செல்வது வழக்கம். இவர்களது மகன் முத்துவேல் (7), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று முன் தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டின் அருகில் இருந்த மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

    Advertisement

    கூலி வேலை செய்து வந்த சத்யா

    இதனிடையே சத்யா வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மகன் இல்லாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனால் யாருமே தங்களுக்கு தெரியாது என கூறிவிட்டனர். இதனால் சத்யா, தனது உறவினர்களின் உதவியுடன் அந்த பகுதியில் அனைத்து இடங்களிலும் தேடினாராம்.

    Gingee Clue: செஞ்சி சிறுமிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி வந்த அக்கா கணவரின் தம்பி! துருவும் சிபிசிஐடி!

    முத்துவேல்

    மேலும் முத்துவேலின் நண்பர்களிடமும் விசாரித்ததாக தெரிகிறது. ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிறுவன் முத்துவேல் குறித்து வாட்ஸ் ஆப் குழுக்களிலும் தகவல்கள் பரவின. இதிலும் எந்த முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என சத்யா புகார் அளித்தாராம்.

    Advertisement

    சிறுவனை தேடிய போலீஸ்

    அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். கிணறுகள், வயல்வெளிகள், புதர்கள் உள்ளிட்ட இடங்களில் அவனை தேடினர். இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு பாழடைந்த வீட்டில் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்டான். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் விளையாட்டு வினையான விவகாரம் தெரிந்தது.