மதுரை: சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. தவெக ஆட்சியிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மதுரையின் இதயப் பகுதியான மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் வைத்து சிறுவன் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பது போல தவெக ஆட்சிக்கு வந்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சரியாகவில்லை. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டிருக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக மதுரையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பார்க்கிங்கில் குபேந்திரன் என்கிற 16 வயது சிறுவன், நேற்று நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், குபேந்திரனை கூர்மையான ஆயுதங்களால் சரமாரி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குபேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் சித்திரை திருவிழாவின்போது குபேரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக அவர்களிடை யே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. முத்துமணியுடன் ஹரி கிருஷ்ணன், முத்துகுமார், ராஜ், குட்டன் சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கதூண் காவல்துறையினர் தனிப்படை அமைத்து, அவர்கள் 5 பேரையும் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் அதிர்ச்சி
போலீஸ் விசாரணை