காசை ’கறி’யாக்கும் மக்கள்.. ஆட்டுச் சந்தையில் அலைமோதிய கூட்டம்! 4 கோடிக்கு வர்த்தகமான ஆடுகள்!

  • மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டு சந்தையில், 4 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது. மதுரையைச் சுற்றியுள்ள வெளிமாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக வருகை தந்து ஆர்வமுடன் ஆடுகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    Advertisement

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள், பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் கொள்முதல் என கடைவீதிகளில் கூட்டம் களை கட்டுகிறது.

    Advertisement

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சரியாக 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக்கான ஆடுகள், கோழிகள் கொள்முதலும் அதிகரித்திருக்கிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட பல மடங்கு ஆடுகள் இறைச்சி விற்பனை செய்யப்படும். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆட்டு சந்தைகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை நடக்கும். அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

    Advertisement

    மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச் சந்தையும், திங்கள்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழி சந்தையும் நடைபெற்று வருகிறது. இதற்காக மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை மதுரை. திண்டுக்கல், விருதுநகர், தேனி, இராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், வரும் 8-ஆம் தேதி தீபாவளிபண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மேலூர் ஆடுகள் விற்பனை வாரச்சந்தையில் கால்நடை வளர்த்து வரும் விவசாயிகள் நள்ளிரவு முதல் காலை வரை சரக்கு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு சந்தையில் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    Advertisement

    இதில் 10 முதல் 12-கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ-8,000 முதல் 10,000 வரையிலும்,
    வெள்ளாடுகள் ரூ-9000 முதல் 12-ஆயிரம் வரை இன்று விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிகமாக தேவைபடுவதால் இன்று நடைபெற்ற இந்த கால்நடை விற்பனை சந்தையில் 4 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெற்றதாக கால்நடை வளர்ப்போரும்,
    வியாபாரிகளும் தெரிவித்தனர்.

    English Summary

    More than 5,000 goats arrive at Melur market as traders from several Tamil Nadu districts drive festive sales beyond ₹3 crore.