ஐயா சொத்துக்காக என் மருமகள் செய்த வேலையை பாருங்க! ஆட்சியர் காலில் விழுந்து அழுத மதுரை மூதாட்டி!

  • மதுரை: மதுரை மாவட்டத்தில் உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்துவிட்டதாக கூறி அவரது மருமகள் வாரிசு சான்றிதழ் பெற்ற நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் காலில் விழுந்து மூதாட்டி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மதுரை மாவட்டம், சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள், மருமகளுடன் வசித்து வந்துள்ளார்.

    Advertisement

    இவரது இளைய மகன் பெருமாளுக்கும் அவரது மனைவி சுந்தரி என்பவருக்கும் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் பெருமாள் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துள்ளார்.

    இதையடுத்து மூத்த மகன் மூர்த்தியின் பெயரில் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பது தொடர்பாக முத்துப்பிள்ளை வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது தான் உயிரிழந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த முத்துப்பிள்ளை, யார் அது போல் சான்றிதழ் வாங்கியது என கேட்ட போது, வங்கி அதிகாரிகள், பெருமாளின் மனைவி சுந்தரி பெயரில் முத்துப்பிள்ளை இறந்தவிட்டதாக குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றனராம்.

    Advertisement

    அதில் பூரண சந்திரன், பாண்டிச்செல்வி, முனீஸ்வரி, தமிழ்செல்வி வேல்முருகன் பிச்சையம்மாள் ஆகியோரின் சாட்சி கையெழுத்துடன் கிராம நிர்வாக அலுவலர் பெயரில் வழங்கியுள்ளனர்.

    இது குறித்து முத்து பிள்ளை விஏஓ அலுவலகத்திற்கு சென்று விஏஓ மற்றும் கிராம அலுவலக உதவியாளர் ஆகியோரிடம் கேட்டுள்ளார். அப்போது இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறி அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக சுந்தரி மீது மட்டும் புகார் அளிக்க வேண்டும். மற்றவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என கூறி கடிதம் எழுதி வாங்கினராம்.

    Advertisement

    இந்த நிலையிலும் தனது மகனுக்கு சொந்தமான நிலம் மற்றும் நகைகளை அபகரிப்பதற்காக சிலர் தூண்டுதலின் பேரில் தன்னை உயிரிழந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதாக கூறி முத்துப்பிள்ளை, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவை சந்தித்து மனு அளித்ததோடு அவரது காலில் விழுந்து எப்படியாவது இதன் மீது நடவடிக்கை எடுங்கள் என கூறினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    இது குறித்து பேசிய முத்துப்பிள்ளை : கணவர் இல்லாமல் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தேன். இளைய மகனுக்கு திருமணமான நிலையில் அவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக உயிரிழந்து விட்டார். அவரது சாவில் தற்போது எனக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நானும் இறந்து விட்டதாக விஏஓ மற்றும் தலையாரி இருவரும் சேர்ந்து சாட்சிகளுடன் வாரிசு சான்றிதழ் ஒன்றை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.

    நான் மிகுந்த அச்சத்தில் உள்ளேன். எனவே அதிகாரிகள், எனது மருமகள் சுந்தரி மற்றும், இதுபோன்று பொய் சாட்சியில் கையெழுத்து போட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Advertisement

    மதுரையில் உயிருடன் இருக்கக் கூடிய மூதாட்டியை உயிரிழந்து விட்டதாக வாரிசு சான்றிதழ் வழங்கி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Madurai shock: Elder woman cries before collector that her daughter in law gets heir certificate by saying VAO that her mother in law died.