பெண்ணை வேலைக்கு அழைத்து ஏமாற்றி கூட்டு பாலியல் பலாத்காரம்.. மேலூர் அருகே கொடூரம்! 5 பேர் கைது

  • மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெண்ணை வேலைக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உண்டு. அவரது கணவன் கைவிட்ட நிலையில் பொருளாதார சிரமம் ஏற்பட்டு வேலை தேடி வந்துள்ளார்.

    இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தாமரைப்பட்டியில் வயதான பெண்மணியை பார்த்துக் கொள்ள ஆள் தேவை என தெரிந்த பெண் மூலமாக அறிந்துள்ளார். அவர்கள் குறிப்பிட்ட தகவல்களின்படி மேலூருக்கு வந்துள்ளார்.

    அங்கிருந்து அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற ஒரு இளைஞர், தாமரைப்பட்டி கண்மாய் அருகே டாஸ்மாக் கடைக்கு அருகில், ஆள் நடமாட்டம் குறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் சந்தேகப்பட்டு கேட்டுள்ளார். அதற்குள் அங்கு 4 பேர் ஏற்கனவே காத்திருந்துள்ளனர்.

    அந்தப் பெண்ணை அவர்கள் கண்மாய்க் கரையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது தாலிச் செயின், கொலுசு, செல்போனை பறித்துச் சென்றனர். இதையடுத்து, அந்தப் பெண் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்த செல்வக்குமார், வினித், அரவிந்த், வீரபாண்டி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மைனர் சிறுவனும் அடக்கம். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    An incident near Melur in Madurai district, where a woman was taken for work and subjected to gang rape, has caused great shock. Five individuals, including a minor, have been arrested for the gang rape.