புறக்கணித்த தவெக எம்எல்ஏக்கள்.. அதிருப்தியில் வெளியேறிய நிர்மல்குமார்.. விஸ்வநாதனால் வில்லங்கம்

  • மதுரை: தவெக ஆட்சியமைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் ஏராளமான சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. தவெகவில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும், சமீபத்தில் கட்சியில் இணைந்து பதவி பெற்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மதுரையில் அமைச்சர் நிர்மல்குமாரின் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு, மற்றொரு அமைச்சரின் நிகழ்ச்சியில் தவெக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதனால் நிர்மல்குமார் அதிருப்தியாகி நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மதுரை அரசு ஆய்வக தொழில்நுட்புநர் சங்கம் விழா நடைபெற்றது. இற்கு சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் நிர்மல்குமார், மதுரை வடக்கு தவெக எம்எல்ஏ கல்லாணை, மதுரை தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ கோபிசன் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டது. விழா அழைப்பிதழ் மற்றும் பேனர்களில் நிர்மல்குமார் மற்றும் 2 எம்எல்ஏக்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. அரசு ஆய்வக நுட்புநர் வெள்ளி விழா மலரை அமைச்சர், எம்எல்ஏக்கள் வெளியிடுவதாக இருந்தது.

    Advertisement

    தவெக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

    நிகழ்ச்சியில் நிர்மல்குமார் மட்டுமே கலந்து கொண்டார். கல்லாணை மற்றும் கோபிசன் ஆகிய 2 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் நிர்மல்குமார் அதிருப்தியடைந்தார்.
    விழா மேடையில் அமராமல் நிர்மல்குமார் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் மதுரை தவெகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறுகையில், "காலை 10 மணிக்கு ஆய்வக நுட்புநர் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிர்மல்குமார் காலை 9.50 மணியளவில் ஆய்வக நுட்புநர் நிகழ்வில் கலந்து கொண்டார். அவருக்கு சங்க நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தோம். எம்எல்ஏக்கள் வந்திருப்பார்கள் என்று நிர்மல்குமார் நினைத்தார். அவர்களை காணவில்லை என்பதால் விழா ஏற்பட்டாளர்களிடம் அதைப்பற்றி நிர்மல்குமார் கேட்டார். எம்எல்ஏக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவரிடம் சொல்லப்பட்டது.

    Advertisement

    நிர்மல்குமார் அதிருப்தி

    மேலூர் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கல்லாணை கலந்து கொண்டுள்ளார். அது முடிந்ததும் உங்கள் நிகழ்வுக்கு வருவதாக சொல்லியுள்ளார். இதையறிந்து நிர்மல்குமார் அதிருப்யானார். எனக்கு வேறு நிகழ்ச்சிகள் உள்ளன. நேற்றும், இன்றும் மட்டுமே மதுரையில் உள்ளேன். அதனால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. நன்றி என சொல்லி கிளம்பிவிட்டார்" என்றனர்.

    English Summary

    Madurai TVK MLA's boycotts Minister Nirmalkumar program. They attended Minister Viswanathan program. Nirmalkumar exit with upset.