மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புத்தாடைகள், இனிப்பு வழங்கி மகிழ்ந்த தன்னார்வலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மதுரை தத்தனேரி மயானத்தில் வைத்து "அனுஷத்தின் அனுகிரகம்" அமைப்பின் சார்பில் சுடுகாட்டில் உடல்களை எரிக்கும், புதைக்கும் மயான பணியாளர்கள் 30 பேருக்கு வேஷ்டி- சட்டை, இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, குழி தோண்டுவது, உடல்களை எரிப்பது மற்றும் மயானத்தை பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்து வரும் மயான ஊழியர்கள், உதவியாளர்கள் இரண்டு பெண்கள் உட்பட 30 பேருக்கு அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, நல திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கினார். தமிழ் அரிமா சங்க பட்டய தலைவர் விஜய பிரகாஷ் முன்னிலை வகித்தார். உதவிகள் வழங்கிய தன்னார்வலர்களுக்கு மயான ஊழியர்கள் நன்றி தெரிவித்து ட்ரஸ்ட்க்கு தங்கள் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டனர்.