Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார்

  • மதுரை: மதுரையில் உள்ள வலதுசாரி ஆதரவாளரும் பிரபல யூடியூபருமான மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டார். அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்த சென்னை சைபர் கிரைம் போலீஸார் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    Advertisement

    அண்மைக்காலமாக முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் ஆகியோர் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தவர் மாரிதாஸ். இவர் வலதுசாரி ஆதரவாளர். இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட சென்னை சைபர் கிரைம் போலீஸார் சென்று அவரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனது வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட போலீஸார் வந்துள்ளதாக மாரிதாஸே தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    English Summary

    Popular right-wing supporter and YouTuber Maridhas was arrested in Madurai. Officials from the Chennai Cyber Crime Police are reportedly planning to bring him to Chennai for further investigation, drawing significant attention from political and social media circles.