மதுரை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழாவும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் தவெக அரசு தமிழ் ஓதுவார்களை தீண்டாமை காட் புறக்கணித்து, சமஸ்கிருத பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவளிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்தும் ஓதுவார் சத்யபாமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மீனாட்சியம்மனுக்கு தமிழில் தான் கருவறை பூஜை, வேள்வி நடத்த வேண்டும். சென்ற முறையே தெய்வத்தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை வைத்தோம். நிறைவேற்றவில்லை. அதனால் கடந்த மாதம் தமிழில் தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.
ஆணும், பெண்ணும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த ஆட்சியில் நியமனம் செய்துள்ளனர். அவர்களை தீண்ட தகாதவர்கள் என கருவறைக்குள் அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் பார்ப்பனர்களால் தீண்டாமை நிகழ்த்தப்படுகிறது. அரசு நியமனம் செய்தவர்களை கருவறையிலும், கோபுரத்திலும் அருள் நீர் ஊற்றி பூஜை செய்யட்டுமே. நாங்கள் தமிழ் பாட சாலையில் படித்தவர்கள். அவர்கள் சமஸ்கிருதத்தில் வேதம் படித்தவர்கள். நாங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளோம். பல கோயில்களில் தமிழில் குடமுழுக்கு வேள்வி நடத்துகிறோம். ஓதுவார்களை ஓரம் கட்டி பார்ப்பனர்களை மட்டுமே வைத்து நடத்துகிறார்கள். இவர்கள் அமைத்துள்ள 154 யாக சாலையிலும் பார்ப்பனர்கள் தான் உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கும் உரிமையை தமிழ் சங்க தலைவி, குல சங்க தலைவருக்கு இல்லையா. அதை ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும். ஆகமம் அடிப்படையில் அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள். அவர்கள் குலத்தை மட்டும் அனுமதிக்கிறார்கள். எங்கள் குலத்தை அழிக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளாரா. அவர் சமத்துவத்தை நிலை நாட்ட, பெரியார் கொள்கையை நிலைநாட்ட, எத்தனை பார்ப்பனர்கள் உள்ளார்களோ, அவர்களுக்கு இணையாக எங்களை அனுமதிக்க வேண்டும். அதை விடாமல் ஒலிபெருக்கி மூலம் ஓதுவார்களை தீண்டாமையால் புறக்கணிக்கிறார்கள். கோபுரத்தில் அருள்நீர் ஊற்றுவோர் யார் என அடையாள அட்டை கொடுக்க சொல்லுங்கள். சிவாச்சாரியார் என்பார்கள். எல்லாரும் பிராமணர்கள் தான். கருவறையில் நம்மை விட்டால் அவர்களை துரத்தி விடலாம். நாம் இல்லாததால் அவர்கள் உள்ளே ஆட்சி செய்கிறார்கள். அர்ச்சனை செய்வது முக்கியமல்ல. கருவறை பூஜை செய்வது தான் முக்கியம். சமஸ்கிருதம் ஓதும் பார்ப்பனர்களுக்கு தான் யாக சாலை பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓதுவோருக்கு கல்யாண மண்டபத்தில் மட்டுமே பணி செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலை இங்கு தான் நிலவுகிறது" என்றார்.தீண்ட தகாதவர்கள்
ஓதுவார்களின் அவலநிலை