சேட்டையை கொடுத்த தவெக மாவட்ட செயலாளர்.. ஒதுக்கிவைத்த அமைச்சர் நிர்மல்குமார்! மதுரையில் நடந்தது என்ன?

  • மதுரை: மதுரையில் முருகன் கோயில் தொகுதியின் தவெக மாவட்ட செயலாளர் ஒருவரை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஒதுக்கி வைத்திருப்பதாக கட்சியினர் மத்தியில் பேச்சுகள் அதிகரித்துள்ளது. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பெயரை சொல்லி ஏராளமான சேட்டைகளை மாவட்டச் செயலாளர் செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் உடனடியாக நெருக்கத்தை நிர்மல்குமார் குறைத்து கொண்டதாக தெரிகிறது.

    Advertisement

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் முதலில் அந்த மாவட்டச் செயலாளர் தான் வேட்பாளராக போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சிடிஆர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட பணிகளை தொடங்கினார். இருப்பினும் அந்த மாவட்டச் செயலாளர் உடனடியாக சிடிஆர் நிர்மல்குமாருக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தார்.

    Advertisement

    இந்த பாசம் காரணமாக மாவட்டச் செயலாளரை அமைச்சரான பின்னரும் கூட சிடிஆர் நிர்மல்குமார் தன்னுடனே வைத்து கொண்டார். மதுரை மட்டுமல்லாமல் சென்னையிலும் கூட சிடிஆர் நிர்மல்குமாருடன் அவர் பயணித்து வந்தார். தலைமைச் செயலகத்தில் சிடிஆர் நிர்மல்குமார் பேட்டி கொடுத்த போதும் கூட அருகிலேயே நின்றார். இதனால் மற்றவர்களுக்கு கூட இவ்வளவு மரியாதையா என்று கேள்வி எழுந்தது.

    ஆனால் சிடிஆர் நிர்மல்குமார் உடனான நெருக்கத்தை பயன்படுத்தி மாவட்டச் செயலாளர் தரப்பு மதுரையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டது. ஏராளமான டெண்டர் விவகாரங்களில் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கவுன்சிலர் சீட்டுக்கும், கட்சிப் பதவிக்கும் பணம் பெற்று கொண்டே செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    Advertisement

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் விஐபி பாஸில் நடந்த முறைகேடுகள் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மாவட்டச் செயலாளரின் எல்லை மீறிய அதிகாரம், நிர்மல்குமாருக்கும் பல்வேறு கெட்டப் பெயரை உருவாக்கி வருவதாக பேச்சுகள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் நிர்மல்குமாருக்கும், மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையில் மோதல் உருவாகி இருக்கிறது.

    மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்டங்கள் முழுக்க சிடிஆர் நிர்மல்குமார் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் மதுரையிலேயே தன்னை மீறி ஒருவர் அதிகாரம் செலுத்துவதை நிர்மல்குமார் விரும்பவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட மாவட்டச் செயலாளரை கொஞ்சம் ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    English Summary

    Minister CTR Nirmal Kumar Cuts Ties with TVK District Secretary Maruthupandian Amid Misconduct Rumours