செலவே ரூ.29 ஆகுது..ஒரு யூனிட் 30 ரூபாய்க்கு மேலயே வாங்குறாங்க! அமைச்சர் சிடிஆர் சொன்ன புது விளக்கம்!

  • மதுரை: மின் கொள்முதலில் ஒரு யூனிட் 30 ரூபாய் கட்டணத்திற்கு நிறைய மாநிலங்கள் மின்சாரம் வாங்கியிருக்கிறார்கள். 30 ரூபாய்க்கு மேலும் நிறைய மாநிலங்கள் வாங்கி இருக்கிறார்கள். உற்பத்தி கட்டணமே 29 ரூபாய் உள்ளது எனவும், முதல் முறையாக குறுகிய நேரத்திற்குள் டெண்டர் மூலமாக இதுபோன்று வாங்கியிருக்கிறோம் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

    Advertisement

    மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தமிழக மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களுடைய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    Advertisement

    தொடர்ந்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரை கொடுத்து பாதுகாத்த கட்சியாக இருந்த அதிமுக குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை.

    சிடிஆர் நிர்மல் குமார்

    எடப்பாடி பழனிசாமியை விட அந்தக் கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள் எத்தனையோ நபர்கள் உள்ளார்கள். லெட்டர் பேடு கம்பெனியாக மாற்றியது குறித்து நான் கூறியது எந்த வித தவறும் கிடையாது. தன்னுடைய சொந்த பணம், தன்னுடைய மகன், தன்னுடைய சுயலாபத்திற்காக அதிமுகவை இவ்வாறு மாற்றிவிட்டார். அவருக்கு பொதுச் செயலாளராக இருக்கும் எந்த ஒரு தகுதியும் கிடையாது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    கல்லாப்பட்டி சிங்காரம் என்று டெண்டர் முறையில் எடப்பாடி வந்தார் என டிடிவி ஏற்கனவே தெரிவித்திருந்தார். கட்சிக்காக உழைத்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். தலைமைக் கழகம் என்பது புரட்சித் தலைவருடைய சொந்த சொத்து. அதில் தற்போது சேர்த்தவர் தான் எடப்பாடி. உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் அதை அனுமதிக்க மாட்டார்கள். அவர் மனம் நோகடிக்கப்பட்டிருந்தால் அது குறித்து நான் பதில் கூற தயார்.

    அதிமுக

    திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து அரசு அமைக்க திட்டமிட்ட காரணத்தினால் தான் அதிமுகவினர் வெளியே வந்தார்கள். எடப்பாடி பழனிசாமியின் முடிவை தலைமைக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு செங்கல் கூட ஏற்றுக் கொள்ளாது. அதிமுகவின் எம்எல்ஏக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எம்எல்ஏ ஹாஸ்டலில் முடங்கி கிடக்கிறார்கள். கட்சியை மோசமான சூழ்நிலையில் நிறுத்திருப்பதற்கு எடப்பாடியின் சுயநலம் தான் காரணம்.

    Advertisement

    அதிமுக எம்எல்ஏக்கள்

    எடப்பாடி பழனிச்சாமியை நம்பி எப்படி பயணிப்பது என்று கேள்வி கேட்கின்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்? எடப்பாடி பழனிச்சாமிக்கு என்று எந்த ஒரு கைபேசியும் கிடையாது. அவருடன் இருக்கக்கூடிய உதவியாளர் அல்லது உடன் இருக்கக்கூடிய எம்எல்ஏக்களை தான் தொடர்பு கொள்ள முடியும்.

    மின் கொள்முதல்

    மின் கொள்முதலில் ஒரு யூனிட் 30 ரூபாய் கட்டணத்திற்கு நிறைய மாநிலங்கள் மின்சாரம் வாங்கியிருக்கிறார்கள். 30 ரூபாய்க்கு மேல் நிறைய மாநிலங்கள் வாங்கி இருக்கிறார்கள். உற்பத்தி கட்டணமே 29 ரூபாய் உள்ளது. முதல் முறையாக குறுகிய நேரத்திற்குள் டெண்டர் மூலமாக சென்றிருக்கின்றோம். இதுவே முதல் முறையாக டெண்டர் மூலம் பெறுவது. புயலால் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக தயாராகி வருகின்றனர்.

    Advertisement

    திமுக ஆட்சி

    கடந்த காலங்கள் போல இல்லாமல் தயார் நிலையில் உள்ளன யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக் என்ற நபர் வந்த பிறகு தான் மெத்தபெட்டமைன் தமிழ்நாட்டில் இவ்வளவு வந்தது. இதே திமுக ஆட்சி காலமாக இருந்தால் பிடிப்பட்டதே! அது வேறு ஒன்றை என்று சொல்லி இருப்பார்கள். இதே நிலைதான் ராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட போது திமுக ஆட்சி காலகட்டத்தில் அது உரம் என்று மறைத்தார்கள். ஆனால் தமிழக அரசு அப்படி கிடையாது யாராக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    English Summary

    Tamil Nadu Electricity Minister CTR Nirmal Kumar says some states buy power above ₹30 per unit, citing generation costs of ₹29.