தேர்தலில் 40 கோடி செலவு செய்தவங்களுக்கு கார் பெருசா.. திமுக மீது நிர்மல்குமார் விமர்சனம்

  • மதுரை: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. திமுக, தவெக இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் திமுக பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் உள்ளது. 10 கார் வைத்திந்தும் அவர்கள் தொகுதிக்குள் செல்லவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

    Advertisement

    மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திமுக எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார் வேண்டாம் என்கிறார்கள். அவர்கள் தேர்தலில் ரூ.30 முதல் 40 கோடி செலவு செய்து வந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் என்று கேட்டு பாருங்கள். இதெல்லாம் அவர்களுக்கு சின்ன டார்கெட். திமுக, அதிமுக கட்சியில் ஒவ்வொருவரும் ஓட்டுக்கு ரூ.2,000 என தொகுதிக்கு 40, 50 கோடி ரூபாய் செலவு செய்து வந்துள்ளனர். அவர்களுக்கு இது சின்ன காசு.

    Advertisement

    கார் பணம்

    எங்களை போல சும்மா வரவில்லை அவர்கள். அவர்களுக்கு 10 கார், ஏராளமான தொழில்கள், கோடிக்கணக்கில் சொத்து பணம் இருக்கும். அடிப்படை வசதி செய்து கொடுத்தால் மக்கள் சேவை சரியாக நடக்கும். இதற்கு முன்பு எத்தனையோ எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களிடம் ஏராளமான கார்களும் இருக்கின்றன. அவர்கள் என்ன தொகுதி முழுவதும் சென்று மக்கள் பணி செய்தார்களா என்ன. அவர்கள் ஊருக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை.

    சொந்த கிராமத்துக்கே செல்லதாதவர் 10-15 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்து என்ன பயன். மக்கள் பணி செய்வதற்கு அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை. மற்றவர்களை போல அல்ல. எம்எல்ஏக்கள் அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து மேம்பாலம், சாலை, தூர்வாருதல், தொழிற்சாலை அமைத்தல் போன்ற பல கோரிக்கைகளை வைப்பார்கள். இதற்கு தொகுதி முழுவதும் சென்று பார்வையிடுவது அவசியம்.

    Advertisement

    கார் ஏன் அவசியம்

    எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற பிறகு தொகுதிக்குள் செல்லவே இல்லை. பல இடங்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு கூட அவர்கள் வரவில்லை. இவர்கள் எம்எல்ஏக்களாக இருந்து என்ன பயன். இதற்கு முன்பு அவர்களுக்கு வேறு வாய்ப்பில்லாமல் இருந்தது. திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக என்கிற நிலை மட்டுமே இருந்தது. இன்றைக்கு எங்கள் தலைவர் விஜய் வந்த பிறகு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    மக்களுக்கு அடிப்படை பணி செய்வது அவசியம். இது எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்காக செய்யவில்லை. விசிக எம்எல்ஏ கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். எம்எல்ஏ செய்யும் பணியை வேறு யாராலும் செய்ய முடியாது. அவர்கள் தொகுதி முழுவதும் சென்றால் மட்டுமே பிரச்னைகளை கவனிக்க முடியும். தாசில்தாரில் இருந்து ஆர்.ஐ வரை எல்லாருக்கும் கார் இருக்கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் கார் வழங்குகிறார்கள். மக்கள் பணிக்காக தானே கார் வழங்கப்படுகிறது. அப்படித்தான் எம்எல்ஏக்களும் வழங்கப்படுகிறது.

    Advertisement

    பாஜகவின் கட்டுப்பாட்டில்

    தொகுதிக்குள் செல்லாமல் 5 கார் இருந்து என்ன பயன். ஊர் ஊராக சென்று வசூல் செய்வதற்கு தான் எதிர்க்கட்சியினர் கார் வைத்துள்ளனர். மக்கள் பணிக்கு ஒரு கார் போதும். பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் தான் திமுக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க போகிறார்களா என்று நாம் கேட்ட கேள்விக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. அவர்கள் பாஜக பக்கம் சென்றுவிட்டனர்" என்றார்.

    English Summary

    Minister Nirmalkumar said, DMK Mla's spend 40 crores in the election. car it's not big thing for them.