என்னை போட்டுத் தள்ள ப்ளான்.. இடைத் தேர்தலை கொண்டு வரலாமா என பேசினாங்க! அமைச்சர் விஸ்வநாதன் பகீர்

  • மதுரை: மக்களின் வரி பணத்தை கொள்ளையடித்தவர்கள் திமுக. இதை காங்கிரஸ் அமைச்சர் பகிரங்கமாக தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார் அமைச்சர் விஸ்வநாதன். மேலும், திமுக கூட்டணியில் இருந்து பிரிந்தவுடன் மதுரைக்கு இடைத்தேர்தல் வந்துவிடும், என்னை போட்டு தள்ளி விடலாமா ? இடைத்தேர்தலைக் கொண்டு வந்து விடலாமா? என்றெல்லாம் பேசினவர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுளார்.

    Advertisement

    மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் முடிவுற்ற அரசு திட்ட பணிகளை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    Advertisement

    அப்போது பேசிய் அவர்," அமைச்சர் விஸ்வநாதன் திமுகவால் வெற்றி பெற்றதை மறந்து விட்டு தவெகவை விட அதிகமாக விமர்சிக்கிறார் என அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் 57 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்று உள்ளார்கள். அந்த வெற்றிக்கு மிகப்பெரிய உரிமை கோருபவர்கள் நாங்கள் (காங்கிரஸ்) ஆக, தான் இருக்க வேண்டும்.

    அமைச்சர் விஸ்வநாதன்

    2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற திமுக மண்ணை கவ்வியது. 2026 சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுகவோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கவில்லை என்றால் திமுக 57 இடங்களை பெற்றிருக்காது. காங்கிரஸ் பலத்தில் தான் திமுக வெற்றி பெற்று இருக்கிறார்கள். எங்கள் உழைப்பில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் உழைப்பில் வெற்றி பெற்றோம் என வாயை திறக்க கூடாது என்பதற்காக தான் தவெக கூட கூட்டணி வைத்துள்ளோம்.

    Advertisement

    காங்கிரஸ் கட்சி

    60 ஆண்டு காலம் கழித்து விஸ்வநாதன் காங்கிரஸ் கட்சி சார்பில் உயர்கல்வி துறை அமைச்சராக உள்ளேன். இதை பொறுக்க முடியாதவர்கள் இன்று அந்த நடைமுறையை எடுத்துக்கொண்டு அரசியலை பேசுகிறார்கள்.
    மக்களின் வரி பணத்தை கொள்ளையடித்தவர்கள் திமுக. இதை காங்கிரஸ் அமைச்சர் பகிரங்கமாக தெரிவிக்கிறேன். எங்க வேண்டுமானாலும் தைரியமாக சொல்லுவேன்.

    மிரட்டல் அரசியல்

    என்னை குறை சொல்லி பார்க்கலாம் என்ற நினைப்பை வைத்துக் கொள்ளக் கூடாது. இந்த மிரட்டல் அரசியலைக் கண்டெல்லாம் நான் பயந்து ஓட மாட்டான். மக்களை நம்பி இருக்கிறேன், மக்கள் என்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மக்கள் வாக்குக்குத்தான் மதிப்பே தவிர. தோற்றுப் போனவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்கிற நிலையில் காங்கிரஸ் பேரியக்கம் இல்லை.

    Advertisement

    கனிமொழி

    எதிர்க்கட்சிகளை கைது செய்வதில் காட்டும் ஆர்வம், குற்றம் செய்பவர்களை இந்த அரசு கைது செய்யவில்லை என திமுக கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆக வேண்டும். தப்பு செய்தவன் யாரா இருந்தாலும் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அரசாங்க சொத்து, மக்களின் பணம் மக்களின் பாவ பணத்தை சுமந்தவன் யாராக இருந்தாலும் சிறைச்சாலைக்குள் கம்பி எண்ணித்தான் ஆக வேண்டும்.

    ஊழல்

    ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர் ஆயிரம் கோடி இரண்டாயிரம் கோடி ஊழல் செய்து சம்பாதித்து வைத்திருப்பார்கள். அந்த பணத்தை எங்கே என கேட்டால் கோபம் வருகிறதோ. இதற்கெல்லாம் கூட்டு சேருவீர்களோ. ஜெயில் வாசலில் இருந்து போராடுவீர்களோ. எல்லாரையும் பிடித்து உள்ளே போட்டால்தான் முடிவு வரும்.

    Advertisement

    இடைத்தேர்தல்

    கரூரிலே கதையை முடித்து இருந்தால் என திமுக கவுன்சிலர் பேசியுள்ளார். என்னை கூடத்தான் இடைத்தேர்தல் கொண்டு வந்து விடலாமா? என நான் ஜெயித்தவுடன் சொன்னார்கள். திமுக கூட்டணியில் இருந்து பிரிந்தவுடன் மதுரைக்கு இடைத்தேர்தல் வந்துவிடும், போட்டு தள்ளி விடலாமா ? இடைத்தேர்தலைக் கொண்டு வந்து விடலாமா? என்றெல்லாம் பேசினவர்கள் இருக்கிறார்கள். நேரம் வரும்போது அதை நான் சொல்லுவேன்" என்றார்.

    English Summary

    Tamil Nadu Higher Education Minister Viswanathan alleges some people discussed killing him to force a by-election and accuses DMK of misusing public money.