பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன?

  • மதுரை: முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டியது இல்லை, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருப்பதா வேண்டாம் என்பது குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கொள்கை முடிவு எடுப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    Advertisement

    மதுரையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, ஜுன் முதல் வாரத்தில் உயர்க்கல்வி சேர்க்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்படும். பொறியியல், மருத்துவ படிப்பில் தமிழ் மொழி அமல்படுத்துவதில் தொழில்நுட்ப காரணங்கள் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

    Advertisement

    தமிழகத்தின் கொள்கை முடிவுகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் எடுப்பார், கடந்த அரசின் கொள்கை முடிவுகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, முதலமைச்சர் ஜோசப் விஜய் கொள்கை முடிவுகளை அறிவிப்பார். அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்கிறார்கள், ராஜினாமா செய்த பின்பு அவர்கள் விரும்பும் கட்சியில் தேர்தலில் நின்று மக்களை சந்திப்பார்கள், இந்த முறையை ஜனநாயக விரோதமாகவும், குதிரை பேரமாகவும் கருத முடியாது.

    எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா ராஜினாமா விவகாரத்தில் ஜோதிமணி கருத்துக்கும், மாணிக்கம் தாகூர் கருத்துக்கும் முரண்படுகிறேன், இதில் மாணிக்கம் மாணிக்கம் தாகூரின் கருத்து தான் என்னுடைய கருத்து.

    Advertisement

    தமிழகத்தில் சண்டை, மோதல்கள் இருக்ககூடாது என்பது தான் காங்கிரஸ் கட்சியின் விருப்பம், மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது என திருமாவளவன் தெரிவித்து உள்ளார். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அனை கட்ட ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது, மேகதாது அனைவரும் முதலமைச்சர் ஜோசப் விஜயின் நிலைப்பாடு என்னவோ அதேதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. 5 ஆண்டுகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நிலைத்து நிற்கும், முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு துணையாக இரும்பு கரத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்படும் " இவ்வாறு கூறினார்.

    Advertisement

    இதனிடையே விழுப்புரம் எம்பி ரவிக்குமார், உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை" என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சர் விஜய் அவர்களின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    English Summary

    Minister Viswanathan states that it is not necessary for the Chief Minister to serve as the Chancellor of the university,