இரவு 11 மணிக்கு மேல் ரயிலில் செல்போன் ‘சார்ஜ்’ செய்ய முடியாது..மின் இணைப்பை துண்டிக்க ரயில்வே முடிவு

  • மதுரை: இனி இந்தியா முழுவதும் ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் செல்போனை சார்ஜ் செய்ய முடியாது. செல்போன் பிளக் பாய்ண்ட்களில் மின் இணைப்பை துண்டிக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. இனி பேன் மற்றும் லைட் மட்டுமே ஓடும். இரவுகளில் நீண்ட நேரம் செல்போன் போட்டு பாட்டு கேட்பது போன்ற விஷயங்கள் நடைபெறுவதை குறைப்பதற்காக இந்த திட்டம் பயன்படும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்போன் ஆறாம் விரல் போல் மக்களிடம் இருக்கிறது. இதனால் பயணங்களின் போது செல்போன் உடன் தான் மக்கள் பயணிக்கிறார்கள். செல்போன் சார்ஜ் தீர்ந்து போனால் சார்ஜ் போடும் வகையில் பிளாக் பாய்ண்டுகள் அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் உள்ளன. இன்றைய சூழலில் அனைத்து வகையான ரயில் பெட்டிகளிலும் பயணிகளுக்கு செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டிருக்கிறது

    Advertisement

    இதன் மூலம் பயண நேரத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள முடிகிறது. இந்நிலையில, சில தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்ட ஒரு ரெயிலில் பயணி ஒருவர் பவர்பேங்கை (சார்ஜ் பேட்டரி) சார்ஜிங் பாயிண்ட்டில் பொருத்தி விட்டு தூங்கிகொண்டிருந்த போது வெடித்து புகை வந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    அதனைத்தொடர்ந்து, ரயில்வே வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது.

    அதில், ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

    Advertisement

    ரயில்வேயின் இந்த உத்தரவுக்கு ஒரு தரப்பு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். மறுபுறம் எதிர்ப்பும் கடுமையாக உள்ளது. ஏனெனில் அவசர சூழலில் சார்ஜ் போட முடியாவிட்டால் பாதிப்பு அதிகமாகும். பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த உத்தரவை ரயில்வே வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    English Summary

    Mobile phones cannot be charged on trains after 11 PM; Indian Railways decides to cut off power supply.