மதுரை: தமிழக முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்து, மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என மதுரை மத்திய தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, புனித மெக்காவிற்கு சென்று மொட்டை அடித்து பிரார்த்தனை செய்துள்ளார். முஸ்தபாவின் இந்தச் செயல் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முஸ்தபா. இவர் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முஸ்தபா போட்ட மொட்டை இந்தப் பயணத்தின்போது தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட முஸ்தபா, வெள்ளை நிற உடையுடன் மெக்காவில் பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், "இந்தியாவில் வாழும் அனைத்து மக்களிடையேயும் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன். விஜய் ஆட்சிக்காக பிரார்த்தனை மேலும், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய், தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டும். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைத்து, மக்கள் நலனுக்காக பல சாதனைகளை படைக்க ஏக இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதேபோன்று உலகம் முழுவதும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும்" என்றும் முஸ்தபா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் பேசப்பட்டதாக முஸ்தபா அளித்த புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக முஸ்தபா குற்றம்சாட்டியிருந்தார். இதில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ரூ.15 கோடியும், வாக்கெடுப்புக்குப் பிறகு ரூ.15 கோடியும் வழங்க முன்வந்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார் இந்தப் புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகியும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி.எம். மன்னன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய்க்காக மெக்காவில் மொட்டையடித்து முஸ்தபா பிரார்த்தனை செய்துள்ள வீடியோ வெளியாகி தற்போது கவனம் பெற்றுள்ளது.