நெல்லை, ராமேசுவரம் பாசஞ்சர் ரயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

  • மதுரை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக நெல்லை, ராமேசுவரம் பாசஞ்சர் ரயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் (வ.எண்.16848) வருகிற 10-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரயில் (வ.எண்.56742) வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கப்படும்.

    Advertisement

    மதுரை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே நெல்லை, திருச்செந்தூர் மற்றும் ராமேசுவரம் பாசஞ்சர் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் (வ.எண்.56003) வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை, 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரயில் (வ.எண்.56004) மேற்கண்ட நாட்களில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரயில் (வ.எண்.56711) இன்று, வருகிற 15-ந்தேதி, 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை, 29-ந்தேதி ஆகிய நாட்களில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரயில் (வ.எண்.56714) இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் மேற்கண்ட நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.

    செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரயில் (வ.எண்.56742) வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.56743) மேற்கண்ட நாட்களில் நெல்லையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சேரன்மாதேவி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.

    Advertisement

    அதேபோல, செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் (வ.எண்.16848) வருகிற 10-ந் தேதி மற்றும் 24-ந் தேதிகளில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரயில் சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 10-ந்தேதி மற்றும் 24-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.

    நாகர்கோவில்-கோவை ரயில் (வ.எண்.16321) வருகிற 14-ந்தேதி, 19-ந்தேதி, 21-ந்தேதி, 22-ந்தேதி, அடுத்த மாதம் 5-ந்தேதி, 6-ந்தேதி, 8-ந் தேதி, 9-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி, கரூர் செல்லும்.

    Advertisement

    நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16354) வருகிற 5-ந் தேதி மற்றும் 19-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரயில் வருகிற 26-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 3-ந்தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக செல்லாமல் நேரடியாக கரூர் செல்லும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Railways has announced changes to the operations of trains serving the southern districts—including the Nellai and Rameswaram passenger trains—due to track maintenance work in areas falling under the Madurai Railway Division.