மதுரை: மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்- மூர்த்தி இடையிலான சண்டையில் நகருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை நல்ல விஷயங்களும் அடிப்பட்டு போய்விடும். திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பவர்சென்டர்கள் இருந்தனர் என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதி கூடல் பெருமாள் கோவில் அருகே தவெகவினர் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா எம்எல்ஏ முஸ்தபா தலைமையில் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்று பேசினார்.
அப்போது, மதுரை மத்திய தொகுதி மதுரையின் இதயம் போன்ற சட்டமன்ற தொகுதி. முஸ்தபாவை தவிர வேறு எந்த ஒரு சிறந்த வேட்பாளரும் இருந்திருக்க முடியாது. மதுரை மத்திய பகுதிக்கு முன்னாள் பி டி ஆர் இருந்தார் அவருடைய தந்தை மிகவும் நல்லவர். பழனிவேல் தியாகராஜனுக்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது. அவருக்கு தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது என்ற எண்ணத்தில் இருந்தார். சென்னைக்கு அடுத்து மதுரைதான் பெரிய மாநகராட்சி. ஆனால் இங்கு கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் இல்லாத நிலை உள்ளது. மதுரையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். அடுத்து வரும் மழைக் காலங்களில் எங்கேயும் மழை நீர் தேங்காத வண்ணம் சரி செய்யப்படும். முன்னாள் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு முன்பு வந்திருக்கிறாரா..? இதுவரை அவரது தந்தையின் பெயரை வைத்து அனைவரும் வாக்களித்துக் கொண்டிருந்தார்கள். மதுரையில் மூர்த்தியை சுற்றிதான் எல்லாம் இருக்கும். பி டி ஆர்- மூர்த்தி இருவருக்கும் இடையே சண்டையில் எல்லாம் முடிந்துவிடும். இங்கு எந்த பவர் சென்றும் கிடையாது. மதுரையில் புது மூர்த்தியும் கிடையாது. புது பி.டி.ஆர்ரும் கிடையாது.. மக்கள்தான் ஒரே பவர் சென்டர். ஒவ்வொரு மாவட்டத்தில் பொன்முடி, கே.என் நேரு, எ.வ வேலு போன்றவர்கள் பவர் சென்டராக இருந்தார்கள். நமது ஆட்சி காலத்தில் யாரும் கிடையாது. எந்த வசூலும் கிடையாது. எந்த பார்ட்டி ஃபண்ட் இல்லை. தைரியமாய் இருங்கள் இது உங்களுடைய அரசு. இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். முதல்வராக விஜய் பதவியேற்ற போதும் இதுவரை பவர் சென்டர்கள் இருந்திருக்கலாம். ஆனால் தவெக ஆட்சியில் இனி எந்த பவர் சென்டரும் கிடையாது. நான் மட்டும்தான் என தெளிவுப்படுத்தியிருந்தார். இதைத்தான் நிர்மல் குமாரும் தெரிவித்துள்ளார்.மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்த போது மின் தடை ஏன்? நிர்மல் குமார் விளக்கம்
மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலின், நிர்மல் குமார்.. திமுக, தவெகவினர் மாறி மாறி கோஷமிட்டதால் பரபரப்பு