மதுரை: முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், கோரிப்பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைவருக்கும் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே பாதுகாப்புதான் முன்னாள் முதலமைச்சருக்கும் வழங்கப்பட்டது. இதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மாலை வரை அதே பாதுகாப்பு நடைமுறையில் இருந்தது என்றார். மின்வெட்டு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மின்சாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியது குறித்த கேள்விக்கு, எங்கெல்லாம் குறைகள் உள்ளனவோ அவற்றைச் சரிசெய்து வருகிறோம் என்று பதிலளித்தார். மின்வெட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, விசாரணை நடத்தி எங்கு குறைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார். குடியரசு துணைத் தலைவர் தமிழர் ஒருவர் பிரதமராக முடியும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, அவர் என்ன நோக்கத்தில் அவ்வாறு கூறினார் என்பது தெரியாது என்று பதிலளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு, முதல் நாளிலிருந்தே ஜெனரேட்டர் மூலம் மின்சார விநியோகம் சோதனை செய்யப்பட்டு வந்தது. மின்சார இணைப்பை ஜெனரேட்டருக்கு மாற்றும் (ஸ்விட்ச் ஓவர்) நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார். ராமநாதபுரம் பசும்பொன்னிற்கு கடந்த 30ஆம் தேதி திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது அவர் மதுரை - கமுதி சாலை சந்திப்பில் இருந்து பசும்பொன் தேவர் தோரணவாயில் முதல் தேவர் நினைவாலயம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இரு புறமும் கூட்டம், வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டன. ஆனால் முன்னாள் முதல்வருக்கு நெறிமுறைபடி உரிய பாதுகாப்பு வழிமுறைகள், வாகன போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்டவை செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் நினைவிடம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் முன்னாள் முதல்வருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் லட்சணமா இது? உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என கடிந்து கொண்டனர். இதுகுறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர், "நான் பாதுகாப்பு பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது, எனக்கு திமுக கட்சி தோழர்களும், தொண்டர்கள் இருக்கின்றனர் அந்த பாதுகாப்பு போதும்" என்றார்.PTR: பிடிஆர்- மூர்த்தி சண்டையில் மதுரைக்கு சோதனை! பவர் சென்டர்கள் என விமர்சித்த நிர்மல் குமார்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்த போது மின் தடை ஏன்? நிர்மல் குமார் விளக்கம்