மதுரை: தீபாவளி பண்டிகைக்கு மின்வெட்டு இருக்காது, ஒரு வேளை எங்காவது மின்வெட்டு இருந்தால் மக்கள் புகார் அளிக்கலாம் என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தேவையில்லாமல் பவர் கட் செய்யக் கூடாது என மின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் ஒன்றியம், எஸ்.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை அமைச்சர் நிர்மல் குமார் திறந்து வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பயிர் கடன் தள்ளுபடி விரைவாக முதல்வர் உத்தரவுக்கிணங்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுகள் எட்டப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்.
அன்பில் மகேஷ் விசாரணை விவகாரத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரம் உள்ளது. அன்பில் மகேஷ் கலெக்ஷன் செய்து யாருக்கு எவ்வளவு கொடுத்தார்? பார்ட்டி ஃபண்ட் என ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் எவ்வளவு வாங்கினார்? இது ஒரு நாளில் நடைபெறும் பிரச்சனை இல்லை. இரண்டு வருஷமாக நடைபெறும் கலெக்ஷன். ஆதாரப்பூர்வமாக கல்வி நிறுவனங்களில் இருந்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் முகாந்திரம் இருக்கு என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் விவசாய பொருட்கள் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்த துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து விவசாய பொருட்கள் இறக்குமதி செய்யும் பணிகள் செய்து குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2031 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக ஜெயிக்காது. ஏற்கெனவே ஜெயித்த தொகுதிகளில் 10-ல் கூட ஜெயிக்க முடியாது. மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் தவெக கூட்டணி வெற்றி பெறும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆதாரம் இருப்பதால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுக ஊழலே செய்யவில்லையா.? மக்கள் பணத்தை கொள்ளையடித்துதான் இந்த இடத்தில் இருக்கிறார்கள். முதல்வர் விஜய், ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் அனைவரையும் சந்தித்து வருகிறார். அதிகப்படியான பேருந்துகளை இயக்குவதற்கு அத்துறை அமைச்சர் ஒரு மாதமாக திட்டமிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறார். செயலி மூலமாக பேருந்து இயக்கத்தை தெரிந்து கொள்ளவும், ஒருங்கிணைத்து கட்டணக் கொள்ளை நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த தீபாவளியில் அதிக மக்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்படும். புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கூடுதலாக்கப்படும். தீபாவளியன்று எந்த ஒரு மின்வெட்டும் இல்லாமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு ஆய்வு செய்து தேவையில்லாமல் பவர் கட் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அரசியலில் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் சிலர் செயல்படுகிறார்கள். லஞ்சம் குறைந்து வருகிறது. கூட்டணி கட்சியுடன் முழு ஒத்துழைப்புடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் சேர்ந்து மக்களுக்கு நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறோம் என்றார். தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது முதலே அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. ஒரு நாள் தவறாமல் பல்வேறு இடங்களில் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைகிறார்கள். இந்த நிலையில் தீபாவளிக்கும் கரன்ட் போகுமா என மக்கள் அஞ்சிய நிலையில் அமைச்சர் நல்லதொரு தகவலை தெரிவித்துள்ளார்.அன்பில் மகேஷ்
விவசாய பொருட்கள்
திமுக வெல்லாது
திமுக ஊழலே செய்யலையா?
நவம்பர் 13 கெடு.. விஜய் ஆட்சியை கவிழ்க்க திமுக ரகசிய டீலிங்? தவெக எம்எல்ஏக்களுக்கு வலை?
செயலி மூலம் ஒருங்கிணைப்பு
புதிய பேருந்துகள்
அரசியல் தெரியவில்லை
புயல் நேரத்தில் காசிமேடு மீனவர்களை கடலுக்குள் செல்ல அனுமதித்தது யார்? தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்
தவெக ஆட்சி