பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் விமர்சனம்

  • மதுரை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அது போல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் நிர்மல் குமார் பேசியிருந்தார்.

    Advertisement

    மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம்
    பேசுகையில், "உதயநிதியின் பேச்சு இது கடுமையான விமர்சனமா, ஆபாசப் பேச்சா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரே விஷயத்தை அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசுவதை பார்க்க முடிகிறது. மூன்று தலைமுறைகளாக இதுபோன்று பேசி வருகிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு அவரது மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. விரக்தியின் உச்சத்தில் அவர் பேசி வருகிறார். பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எவ்வாறு பேச வேண்டும் என்பதில் பொறுப்பு இருக்க வேண்டும்.

    Advertisement

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

    அவர் பேசியதை அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் போட்டுக் காட்ட முடியுமா? இதுபோன்ற பேச்சுகளைக் கொண்ட கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

    பொது வாழ்க்கையில் இருந்து உதயநிதி ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவர் கடைசி வரை கத்துக்குட்டி தான். உதயநிதியை வைத்து திமுகவிற்கு எதிர்காலம் இருக்கிறதா என்பதை திமுகவினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

    40 ஆண்டுகள்

    40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பின்பற்றி வந்த பெண்கள் தற்போது தமிழக முதல்வர் விஜய்யை பின்பற்றி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் போன்ற ஒருவரை வைத்து கட்சியை நடத்துவது குறித்து திமுகவினர் சிந்திக்க வேண்டும்.

    Advertisement

    அரசியல், ஆட்சி, மக்கள் பிரச்சினைகள் குறித்து புரிந்துகொள்ளாமல் நிதானம் இழந்து அவர் பேசியிருப்பதாக தோன்றுகிறது. எனவே உதயநிதி குறித்து தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்". பொது வாழ்க்கைக்கு தகுதியே இல்லாதவர் உதயநிதி.

    100 சதவீதம் லஞ்சம் இல்லை

    அரசு அலுவலகங்களில் 100 சதவீதம் லஞ்சம் இல்லாமல் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எந்த அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்கப்பட்டாலும் பொதுமக்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். தகவல் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றத்தை விரும்பிய அரசு இது. சமுதாயத்தை மாற்ற வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    Advertisement

    கம்யூனிஸ்ட் தோழர்கள்

    "இக்கட்டான நேரங்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். சில நிலைப்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதுகுறித்து பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொள்வோம். என்ன நடந்தாலும் அதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது" என்றார்.