சபாநாயகரின் தேநீர் விருந்தில் கனிமொழி.. தவெக சொன்ன குற்றச்சாட்டு.. யூடர்ன் போட்ட மாணிக்கம் தாகூர்!

  • மதுரை: சபாநாயகர் ஓம் பிர்லா கொடுத்த தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டதில் எந்தவித அரசியலும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். முன்னதாக நடந்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டிருந்ததாக கூறிய மாணிக்கம் தாகூர், இது ஒன்றும் குற்றம் அல்ல, மரபு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த பின் சபாநாயகர் ஓம் பிர்லா கொடுத்த தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் புறக்கணித்தன. ஆனால் திமுக எம்பி கனிமொழி மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றார். இதுதொடர்பாக கனிமொழி பேசுகையில், நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இல்லை. நாடாளுமன்றத்தில் இடமாற்றம் கோரி இருந்தோம். அதற்காக தேநீர் விருந்தில் பங்கேற்றதாக பதில் அளித்தார்.

    Advertisement

    ஆனால் கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்றதன் மூலமாக திமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டதாக தவெகவின் பேசத் தொடங்கினர். அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் திமுக - பாஜக நேரடி கூட்டணி அமைத்துவிட்டதாக பேசினர். அதேபோல் சோசியல் மீடியாவில் காங்கிரஸ் கட்சியினரும் கனிமொழி மீதும், திமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டதாகவும் பேசி வந்தனர்.

    இந்த நிலையில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என்னை பொறுத்தவரை சபாநாயகர் அளிக்கும் தேநீர் விருந்தில் முன்பு கூட நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கூட கலந்து கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    சபாநாயகர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதில் ஒன்றும் குற்றம் கிடையாது. அதுவொரு மரபு.. எதற்கான மரபு என்றால், கூட்டத்தொடரை நடத்தி கொடுத்த சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் நன்றி சொல்லும் வகையில் நடப்பது தான். அதனை தவிர்த்து வேறு ஒன்றும் நடக்காது. சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு வந்துவிட வேண்டியதுதான்.

    இந்தியா கூட்டணி புறக்கணித்ததற்கு அமித்ஷா கூட்டத்தொடருக்கு வராததே காரணம். அவைக்கு வர மாட்டேன் என்று 16 நாட்களாக அமித்ஷா பிடிவாதமாக இருந்தார். அதனால் இந்தியா கூட்டணி தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. கனிமொழி கலந்து கொண்டதில் பெரிய அரசியல் இல்லை.. அரசியல் கூட்டணி என்பதெல்லாம் தேநீர் விருந்தில் அமைந்துவிடாது. இதில் தவறான நினைக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    No Politics in Kanimozhi Attending Speaker Om Birla's Tea Party, Says TN Congress Chief Manickam Tagore