முதல்வர் விஜய்யை பார்க்க வந்த 15-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம்! மதுரை ராஜாஜி GH அருகே பரபரப்பு

  • மதுரை: மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த முதல்வர் விஜய்யை பார்க்க காத்திருந்த மக்களில் 15-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வந்த ஆம்புலன்ஸ் வாகனம், முதல்வரின் கான்வாய் வாகனங்களால் ஆம்புலன்ஸ் வழியில்லாமல் திணறி சாலையிலேயே நின்றது.

    Advertisement

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் வந்திருந்தார். இதனால் மதுரை மருத்துவமனையை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் முதல்வர் விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். தங்க மோதிரம் திட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் காலை முதலே மக்கள் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு குவிந்தனர். காலையிலேயே சென்றால்தான் விஜய்யை முன் வரிசையில் இருந்து பார்க்க முடியும் என கருதிய பலரும் காத்திருந்தனர். மக்கள் குவிய குவிய வழிகள் எல்லாம் பேரிகார்டு போட்டு அடைக்கப்பட்டதால் கிட்டதட்ட 3 மணி நேரமாக வெளியேற முடியாமல் அங்கேயே இருந்தனர்.

    Advertisement

    குடிப்பதற்கு தண்ணீர் கூட வைக்கப்படவில்லை. காலாண்டு விடுமுறை என்பதால் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நீண்ட நேரமாக மதுரை வெயிலில் காத்திருந்தனர். இதனால் பலருக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுந்தனர்.

    குழந்தைகள், பெண்கள் என 15-க்கும் மேற்பட்டோர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதறிய காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை வரவழைத்தனர்.

    ஆனால் முதல்வர் கான்வாய் வாகனங்கள் அனைத்தும் சாலையின் நடுவில், மருத்துவமனை முன்பாக நிறுத்தப்பட்டதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி சாலையிலேயே நின்றது.

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை சென்ற முதல்வர் விஜய்யின் பாதுகாப்பு நடவடிக்கையால் விமான நிலையம் முதல் காந்தி மியூசியம் வரை இரு புறமும் 44.7 கி.மீ. தூரத்திற்கு தடுப்பு அமைக்கப்பட்டது.

    Advertisement

    நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் அல்லாது சாலைகளிலும் இது போல் தடுப்புகளை அமைத்து மக்களை கட்டுப்படுத்துவதால் அவர்கள் வெயிலில் காத்திருந்து திடீரென மயங்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

    தவெக சார்பில் எந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அவர்களுக்கு crowd management எப்படி செய்வது என தெரியவில்ல என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இப்படித்தான் பாதுகாப்பு பாதுகாப்பு என கூறி மக்களை நீண்ட நேரமாக காத்திருக்க வைத்ததால் கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்து தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மற்ற முதல்வர்களின் நிகழ்ச்சிகளை காட்டிலும் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பால் இது போன்ற குழப்பங்கள் நடக்கின்றன.

    English Summary

    10 more people fainted near Madurai Rajaji Government hospital when they were waiting to see CM Vijay.